Latest Updates
-
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
வெண்டைக்காய் புளிக்குழம்பு
வெண்டைக்காயில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்த வெண்டைக்காயை வாரம் ஒருமுறை வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் மூளை செயல்பாடு அதிகரிக்கும். அதிலும் அதனை தேங்காய் சேர்த்து புளிக்குழம்பு செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
இங்கு தேங்காய் சேர்த்து வெண்டைக்காய் புளிக்குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 10-15 (துண்டுகளாக்கப்பட்டது)
சின்ன வெங்காயம் - 10 (தோலுரித்தது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 6 பற்கள்
புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன் (எலுமிச்சை அளவு புளியை நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
எண்ணெய் - 1 டீஸ்பூன்
மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 6-10
துருவிய தேங்காய் - 1/2 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளித்து, பின் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பின்பு அதில் வெண்டைக்காயை சேர்த்து 7-10 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து அதில் உப்பு, சர்க்கரை, அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications