Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
பப்பரை சப்பாத்தி
இதுவரை சப்பாத்தி என்றால் கோதுமை, மைதா போன்றவற்றை தான் பயன்படுத்தியிருப்போம். ஆனால் பப்பரை (kuttu atta/buckwheat flour) என்னும் தானியத்தால் செய்யப்பட்ட மாவை பயன்படுத்தியிருக்க மாட்டோம். ஆனால் இந்த பப்பரை மாவில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாகவும் இருக்கும்.
இப்போது அந்த பப்பரை மாவு கொண்டு செய்யப்படும் சப்பாத்தியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பப்பரை மாவு (kuttu atta/buckwheat flour) - 2 கப்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 2 (மசித்தது)
உப்பு - 1 டீஸ்பூன்
நெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் பப்பரை மாவைப் போட்டு, அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி பதத்திற்கு மென்மையாக பிசைந்து, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி போன்று தேய்த்து, வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், கல்லில் நெய்யைத் தடவி, பின் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு, சப்பாத்திகளின் முன்னும் பின்னும் நெய் தடவி, வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான பப்பரை சப்பாத்தி ரெடி!!!



Click it and Unblock the Notifications
