Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
முந்திரி தக்காளி மசாலா

தேவையான பொருட்கள்:
தக்காளி - 1/2 கிலோ (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 1
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 1
முந்திரி - 8
தேங்காய் - 1 கப் (துருவியது)
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 சிட்டிகை
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் தக்காளியில் பாதியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ளதை மிக்ஸியில் போட்டு, அத்துடன் 4 முந்திரி மற்றும் தேங்காய் போட்டு நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம், பட்டை, ஏலக்காய் போட்டு தாளிக்க வேண்டும்.
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கியதும், தக்காளியை போட்டு நன்கு வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலா, சர்க்கரை, உப்பு போட்டு, தேவையான அளவில் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.
மசாலா கொதித்ததும், அதில் கரம் மசாலா மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, நன்கு கொதிக்க விட்டு, மீதமுள்ள முந்திரியை போட்டு 1 நிமிடம் அடுப்பில் வைத்து, இறக்கி விட வேண்டும்.
இப்போது முந்திரி தக்காளி மசாலா ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
