Latest Updates
-
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
நவம்பர் 14, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் -
கேது கடக ராசிக்குள் செல்வதால் 18 மாதங்களுக்கு நரகத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2026 ராகு-கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும் தெரியுமா? -
4 முட்டையும், 1 கப் தயிரும் இருந்தா இந்த பஞ்சாபி மசாலாவை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு பக்காவா இருக்கும் -
தூங்க செல்வதற்கு முன் பாதத்தில் தேங்காய் எண்ணெயை தடவினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
உங்கள் இரத்தப் பிரிவு உங்கள் குணங்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா? -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க செய்த சத்தியத்தை எப்போதும் காப்பாற்ற மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாகர்கோவில் கருப்பட்டி பணியாரம் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
அதிக பனியால் சருமம் சொரசொரன்னு இருக்குதா? அப்ப இந்த ஸ்க்ரப்பை வாரம் 1 முறை யூஸ் பண்ணுங்க..
ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு
இதுவரை எத்தனையோ ஸ்டைலில் குழம்பு வைத்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் பலரும் தெரிந்து கொள்ள விரும்பும் ஒரு ஸ்டைல் தான் ஐயங்கார் ஸ்டைல் உணவுகள். ஏனெனில் இந்த ஸ்டைல் உணவுகளின் சுவையே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இங்கு அந்த ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்.
அதைப் படித்து அதனை உங்கள் வீட்டில் செய்து சமைத்துப் பாருங்கள். நிச்சயம் இது உங்களின் விருப்பமான குழம்புகளில் ஒன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 10 (நறுக்கியது)
கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு...
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 5
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் 'வறுத்து அரைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதே நேரம் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.
பிறக அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடம் மூடி வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
அதற்குள் சிறு வாணலியை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்து, பின் இறுதியில் அதனை குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கினால், ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
