Latest Updates
-
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம்
கொள்ளு சட்னி
காலையில் இட்லி, தோசை போன்றவை சமைக்கும் போது, அதற்கு எப்போதும் சைடு டிஷ்ஷாக தேங்காய் சட்னியைத் தான் பலரும் செய்வார்கள். ஆனால் சற்று வித்தியாசமாக வீட்டில் கொள்ளு பருப்பு இருந்தால், அதனைக் கொண்டு சட்னி செய்து சாப்பிடுங்கள். இந்த சட்னியானது சுவையாக இருப்பதுடன், ஆரோக்கியமானதும் கூட.
மேலும் மதிய வேளையில் இட்லி எடுத்து சென்றால், அதற்கு அருமையாகவும் இருக்கும். சரி, இப்போது கொள்ளு சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1/4 கப்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 3/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளுவை போட்டு பொன்னிறமாக வாசனை வரும் வரை வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
பின்னர் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு, சீரகம், வரமிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து 3 நிமிடம் வறுத்து, பின் அதில் வறுத்த கொள்ளு சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் வறுத்து, இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் புளி சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதனை ஒரு பௌலில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீதமுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், கொள்ளு சட்னி ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
