Latest Updates
-
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க..
பன்னீர் மஞ்சூரியன்
பெரும்பாலானோருக்கு பன்னீர் ரெசிபிக்கள் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் பல பன்னீர் ரெசிபிக்களை பார்த்திருப்போம். இப்போது சற்று வித்தியாசமான ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியை, அதுவும் மாலை வேளையில் வீட்டில் இருக்கும் போது, வீட்டில் உள்ளோரை அசத்தும் வகையில் ஒரு பன்னீர் ரெசிபியைக் கொடுத்துள்ளோம்.
அதன் பெயர் தான் பன்னீர் மஞ்சூரியன். சரி, அந்த பன்னீர் மஞ்சூரியன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 250 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 2 (நறுக்கியது)
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 3 பற்கள் (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ண்ய ஊற்றி, பன்னீர் துண்டுகளை 3-4 நிமிடம் தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக வதக்கி, அதனை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு பூண்டு, குடைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
அடுத்து சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து, 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின்பு மீதமுள்ள சோளமாவை 1/2 கப் தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி, கலவையானது கெட்டியாக ஆரம்பிக்கும் போது, வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளைப் போட்டு, நீர் வற்றும் வரை மென்மையாக பிரட்டி விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பன்னீர் மஞ்சூரியன் ரெடி!!!



Click it and Unblock the Notifications
