Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
பச்சை மொச்சை சாம்பார்

தேவையான பொருட்கள்:
பச்சை மொச்சை - 2 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)
துவரம் பருப்பு - 1 கப் (நீரில் ஊற வைத்தது)
பூண்டு - 5 பல்
தக்காளி - 1 (நறுக்கியது)
புளி சாறு - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வெல்லம் - 1 சிறுதுண்டு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மொச்சையை கழுவி போட்டு, போதுமான தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கி, தண்ணீரை வடித்து குளிர வைக்க வேண்டும். இதேப்போன்று துவரம் பருப்பையும் குக்கரில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கி, கடைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு அதில் நறுக்கிய தக்காளி மற்றும் கத்தரிக்காய் சேர்த்து, 3 நிமிடம் வதக்கி, கடைந்து வைத்துள்ள துவரம் பருப்பை ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.
பின்பு உப்பு, மல்லி தூள், மிளகாய் தூள், புளி சாறு மற்றும் வெல்லம் சேர்த்து, 2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும்.
சாம்பாரானது நன்கு கொதித்ததும், அதில் வேக வைத்துள்ள மொச்சையை போட்டு, 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து, கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான மொச்சை சாம்பார் ரெடி!!! இதனை சாதத்துடன் தொட்டு சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
