Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
சுவையான... ஆலு பரோட்டா

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 4
மைதா மாவு - 4 கப்
பச்சைமிளகாய் - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
மசாலாத் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
கரம்மசாலா பொடி - 1 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா மாவைப் போட்டு, அதில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து, மாவை மூடி வைத்து ஊற விடவும். பின் பச்சை மிளகாயை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு குக்கரில் உருளைக் கிழங்கு, சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து, உருளைக் கிழங்கின் தோலை உரித்துவிட்டு நன்கு மசித்துக் கொள்ளவும்.
பின் அந்த மசித்த உருளைக்கிழங்கில் சீரகத்தூள், மசாலாத் தூள், மிளகாய்த் தூள், கொத்தமல்லி தூள், கரம்மசாலா பொடி, சோம்புத்தூள், நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளிக்கவும். பின் அதோடு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை போட்டு நன்கு கிளறவும். மசாலா வாசனை போகும் வரை கிளறி, பின்னர் இறக்கி வைத்து ஆறவிடவும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு உருண்டையை எடுத்துக் கொண்டு, மைதா மாவில் லேசாக தேய்த்து, பின் வட்டமாக சப்பாத்திப் போல் தேய்க்கவும். அதன் மத்தியில் ஒரு ஸ்பூன் உருளை மசாலாவை வைக்கவும்.
பின் அதன் ஓரங்களை மடித்து மசாலா தெரியாதவாறு மூடவும். பிறகு அதனை எடுத்து வெறும் மைதா மாவில் தேய்த்து, மறுபடியும் சப்பாத்திப் போல் தேய்க்கவும். இவ்வாறு செய்யும் போது மிகவும் கவனமாக தேய்க்க வேண்டும். அழுத்தி தேய்த்தால் உள்ளே வைத்துள்ள மசாலா வெளியில் வந்துவிடும். இதே போல் அனைத்து உருண்டைகளையும் பரோட்டா போல் செய்யவும்.
பின்னர் அடுப்பில் ஒரு தோசைக் கல்லை வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி, தேய்த்து வைத்துள்ள பரோட்டாக்களில் ஒன்றை எடுத்துப் போட்டு, தீயை குறைத்து வைத்து வேக வைக்கவும். இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும். இவ்வாறு அனைத்து பரோட்டாக்களையும் வேக வைத்து எடுக்கவும்.
இப்போது சுவையான ஆலு பரோட்டா ரெடி!!!
குறிப்பு: இதனை கோதுமை மாவிலும் செய்யலாம்.



Click it and Unblock the Notifications
