Latest Updates
-
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
ருசியான...மோர் குழம்பு

தேவையான பொருட்கள்:
மோர் - 4 கப் (சிறிது புளித்தது)
பூசணிக்காய் - 1 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 6
வர மிளகாய் - 2
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
கடலைப் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
மல்லி - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
கல் உப்பு - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 2 1/2 கப்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மல்லி ஆகிய மூன்றையும் போட்டு, தண்ணீர் ஊற்றி சுமார் அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய பூசணிக்காயை தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து, 5 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு மிக்ஸியில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், ஊற வைத்த பருப்பு, மிளகு, சீரகம் ஆகிய அனைத்தையும் சேர்த்து, ஓரளவு அரைத்து, அதில் இஞ்சியை தட்டி போடவும்.
பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வர மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் போட்டு தாளிக்கவும்.
பின் அதில் மோரை ஊற்றி, அத்துடன் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையையும் சேர்த்து கிளறி, ஒரு நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
அடுத்து வேகவைத்துள்ள பூசணிக்காய் துண்டுகளை, அதோடு சேர்த்து பிரட்டி, மிதமான தீயில் வைத்து வேகவிடவும். குழம்பு ரெடி ஆகும் போது, நுரைப் போல் பொங்கி வரும். அப்போது அதனை இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான மோர் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
