Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
சுரைக்காய் மசாலா
சுரைக்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. அத்தகைய சுரைக்காயை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் சுரைக்காயை மசாலா போன்று செய்து, சாதத்துடன் சாப்பிட்டால், நன்றாக இருக்கும்.
இங்கு அந்த சுரைக்காய் மசாலாவின் செய்முறை தான் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் எளிமையான செய்முறை. பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். சரி, அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சுரைக்காய் - 1/2 கிலோ
தயிர் - 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் சுரைக்காயை தோலுரித்து, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தமும், சீரகம் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள சுரைக்காயை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, சீரகப் பொடி, மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பிறகு தயிரை நன்கு அடித்து, அத்துடன் சேர்த்து கிளறி, உப்பு தூவி, 3-4 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
அடுத்து தண்ணீர் ஊற்றி, 8-10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
பின்பு மூடியை நீக்கிவிட்டு, சுரைக்காய் வெந்துவிட்டால், அதில் கரம் மசாலா தூவி கிளறி, இறக்கி விட வேண்டும்.
இப்போது அருமையான சுரைக்காய் மசாலா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications
