Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
ஓணம் தினத்தன்று செய்யக்கூடிய சில ஸ்பெஷல் ரெசிபிக்கள்!!!
கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு பண்டிகை என்றால் அது ஓணம் பண்டிகை தான். இந்த பண்டிகை அன்று கேரளாவில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் வகை வகையான கேரளா உணவுகளை சமைப்பார்கள். அவ்வாறு சமைக்கும் அனைத்து உணவுகளும் கேரளாவில் மிகவும் பிரபலமானவைகள். அதுமட்டுமின்றி, அவை வித்தியாசமான சுவையுடையவையும் கூட.
இந்த ஓணம் பண்டிகையை ஓணம் சத்ய என்றும் அழைப்பார்கள். இதில் சத்ய என்றால் விருந்து என்று பொருள். விருந்து உணவிற்கு எப்படி பல்வேறு உணவுகளை சமைப்போமோ, அப்படி பல்வேறு கேரளா உணவுகளை கேரளா மக்கள் சமைப்பார்கள். ஆகவே ஓணம் பண்டிகை அன்று கேரளாவில் உள்ள நண்பர்கள் வீட்டிற்கு சென்றால், நிச்சயம் கேரளா உணவுகள் அனைத்தையும் சுவைத்து விட முடியும்.
உணவுக்காக அங்கு செல்ல தயங்கினால் கவலைப்படாதீர்கள், தமிழ் போல்ட் ஸ்கை கேரளாவில் உள்ள சில வித்தியாசமான ரெசிபிக்களின் செய்முறையைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து, அவற்றை ஓணம் தினத்தன்று வீட்டில் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

அவியல்
ஓணம் அன்று செய்யப்படும் உணவுகளில் அவியலும் ஒன்று. இந்த ரெசிபி ஆரோக்கியமானது மட்டுமின்றி, வித்தியாசமான சுவையையும் கொண்டது.

அரிசி புட்டு
கேரளாவில் புட்டு மிகவும் சிறப்பான உணவுப் பொருள். இந்த ரெசிபியையும் ஓணம் பண்டிகையன்று செய்வார்கள். இதன் செய்முறை மிகவும் எளிமையானது.

வெஜிடேபிள் தியல்
பெயரைக் கேட்டாலே ஒன்றும் புரியவில்லை தானே! இது கூட்டு போன்று இருக்கும். இதுவும் ஒரு ஆரோக்கியமான ரெசிபி.

உண்ணியப்பம்
பணியாரம் போன்று இருக்கும் உண்ணியப்பமும் மிகவும் பிரபலமான கேரளா ரெசிபிக்களில் ஒன்றாகும். இது இனிப்பான ரெசிபி என்பதால், குழந்தைகளுக்கு மிகவும் பிடிப்கும்.

பருப்பு
பருப்பு குழம்பில் பல ஸ்டைல் உள்ளது. அதில் ஒன்று தான் கேரளா ஸ்டைல். இந்த ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், தேங்காயை சேர்த்து செய்வது தான்.

மிக்ஸ்ட் வெஜிடேபிள் தோரன்
ஓணம் பண்டிகை அன்று செய்யப்படும் ரெசிபிக்களில் ஒன்று தான் மிக்ஸ்ட் வெஜிடேபிள் தோரன். தோரன் என்றால் பொரியல் என்று பெயர். இதில் பல காய்கறிகளை சேர்த்து செய்வதால், இதுவும் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைக் கொடுக்கும் ரெசிபிக்களில் ஒன்றாக உள்ளது.

கூட்டு கறி
கேரளாவின் மலபாரில் உள்ள ஒரு ஸ்பெஷலான ரெசிபி தான் கூட்டு கறி. இதனை சாத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

பாசிப்பருப்பு பாயாசம்
விருந்து எங்கு வந்தாலும், அங்கு நிச்சயம் பாயாசம் இருக்கும். அதிலும் பாசிப்பருப்பு பாயாசம் மிகுந்த சுவையுடன் இருப்பதோடு, சத்துக்களையும் உள்ளடக்கியது.

இலை அடை
இலை அடை என்பது கேரளாவில் செய்யப்படும் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. சொல்லப்போனால் இதனை கொழுக்கட்டை என்றும் சொல்லலாம். இதன் சிறப்பு என்னவென்றால் இந்த ரெசிபியை வாழை இலையால் செய்வோம்.

அடை பாயாசம்
இலை அடை அதிகமாக இருந்தால், அந்த அடையை வைத்து ஒரு வித்தியாசமான வகையில் பாயாசம் செய்வார்கள். அதற்கேற்றாற் போல் இதுவும் வித்தியாசமான சுவையைக் கொண்டிருக்கும்.



Click it and Unblock the Notifications











