Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
1 கப் பட்டாணி இருந்தா இந்த மாதிரி பட்டர் மசாலா செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும்
Pattani Butter Masala Recipe in Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் என்ன சைடிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? அப்படியானால் பட்டாணியை வைத்து ஈஸியான முறையில் பட்டாணி பட்டர் மசாலா செய்து கொடுங்கள். பொதுவாக பனீரை வைத்துதான் பட்டர் மசாலா செய்வோம், ஆனால் பட்டாணியை வைத்து சூப்பரான பட்டர் மசாலா செய்யலாம்.

இந்த பட்டாணி பட்டர் மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரி, நாண் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சிம்பிளான பட்டாணி பட்டர் மசாலா குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த பட்டாணி மசாலா சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட.
உங்களுக்கு மிகவும் ஈஸியான முறையில் பட்டாணி பட்டர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பட்டாணி பட்டர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- ஊற வைத்த பட்டாணி - 1 கப்
அரைக்க:
- தக்காளி - 4
- பெரிய வெங்காயம் - 3
தாளிக்க:
- பட்டை - 1 இன்ச்
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 1
- இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
- தனியா தூள் - 2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
- வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
- சீரகம் - 1/4 டீஸ்பூன்
- வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- சர்க்கரை - ஒரு சிட்டிகை
- கொத்தமல்லி இலைகள் - அலங்கரிக்க
- ஃப்ரெஷ் க்ரீம் (Fresh cream) - சிறிதளவு
செய்முறை:
- பட்டாணியை இரவே ஊறவைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் சிறிது பட்டறை சேர்த்து, அதில் சீரகம் மற்றும் வெந்தயத்தைச் சேர்த்து லேசான பொன்னிறமாகும் வரை வறுத்து, அவற்றை பொடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
- தக்காளி மற்றும் வெங்காயத்தை ஒன்றாகச் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயைச் சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி-வெங்காய விழுதைச் சேர்க்கவும். குறைந்த தீயில் வைத்து, வெண்ணெய் மேலே மிதந்து வரும் வரை வதக்கவும்.
- பிறகு இஞ்சி-பூண்டு விழுது, மல்லித் தூள், மிளகாய் தூள், சிறிதளவு சர்க்கரை மற்றும் சிறிது நீரில் கரைத்த தக்காளி சாஸ் ஆகியவற்றைச் சேர்க்கவும். நல்ல மணம் வரும் வரை சிறிது நேரம் வதக்கவும்.
- இறுதியாக, ஊறவைத்த பட்டாணியைச் சேர்த்து நன்றாக கிளறவும்.
- பட்டாணி நனறாக வெந்ததும் அரைத்து வைத்த பொடியை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இறுதியாக பிறகு, கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரிக்கவும்.
- சப்பாத்தியுடன் சாப்பிடுவதாகிரு முன் கொஞ்சம் ப்ரெஷ் க்ரீம் சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
