நாவூறும் உருளைக்கிழங்கு பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - மட்டன் பிரியாணியே தோத்துரும்

Posted By:

Potato Biryani Recipe in Tamil: இந்தியா முழுவதும் பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவென்றால் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு பிரியாணி என்றுதான் கூறுவார்கள். இந்தியர்களுக்கு பிரியாணி என்பது வெறும் உணவல்ல அது விவரிக்க முடியாத உணர்வாகும். முகலாயர்கள் இந்தியாவிற்கு கொண்டு இந்த பிரியாணி தற்போது இந்தியர்களுடன் பின்னி பிணைந்ததாக மாறிவிட்டது.

Potato Biryani Recipe How to Make at Home in Tamil

பிரியாணி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சிக்கன் அல்லது மட்டன் பிரியாணிதான். வேறு வழியே இல்லாத நேரத்தில் வெஜ் பிரியாணியை சாப்பிடுவோம். ஆனால் பிரியாணியை வேறு சில பொருட்களை வைத்தும் சமைக்கலாம். அதில் மிகவும் வித்தியாசமான ஒன்றுதான் உருளைக்கிழங்கு பிரியாணி. பெரும்பாலான மக்களுக்கு பிடித்த காய்கறியென்றால் அது உருளைக்கிழங்குதான். உருளைக்கிழங்கில் பிரியாணி செய்யும் போது அது அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும். இந்த பிரியாணி செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும்.

உங்களுக்கு சுவையான உருளைக்கிழங்கு பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- சீரகச் சம்பா அரிசி - 1 கப்
- பெரிய உருளைக்கிழங்கு - 3 (துண்டுகளாக நறுக்கியது)
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- நெய் - 2 ஸ்பூன்
- பிரியாணி இலை - 1
- பட்டை - 1
- கிராம்பு - 2
- கல்பாசி - சிறிதளவு
- பெரிய வெங்காயம் - 1
- இஞ்சி-பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
- தக்காளி - 1
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- தனியா தூள் - 1 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
- புதினா இலை - ஒரு கைப்பிடி
- தயிர் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - ஒன்றரை கப்

செய்முறை:

- முதலில் உருளைக்கிழங்கை நன்றாகக் கழுவி, அதன் தோலை நீக்கவும். அவற்றை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

- ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் இலவங்கப்பட்டை, கிராம்பு, கல்பாசி மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.

- பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து, அவற்றின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

- அதன்பின் நறுக்கிய தக்காளி மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு வதக்கவும்.

- பின்னர் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூளை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கிளறவும்.

- சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

- உருளைக்கிழங்கு முக்கால் பதம் வெந்ததும் புதினா மற்றும் தயிர் சேர்த்து கிளறவும்.

- கடைசியாகக் கழுவிய அரிசி, தேவையான தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும்.

- இந்த கலவையை நன்றாகக் கலந்து, குறைந்த தீயில் ஒரு விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். நீராவி வெளியேறிய பிறகு குக்கரைத் திறக்கவும்.

- அவ்வளவுதான் சூப்பரான உருளைக்கிழங்கு பிரியாணி ரெடி, இதை தயிர் வெங்காயத்துடன் பரிமாறவும்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, June 10, 2026, 10:49 [IST]
Desktop Bottom Promotion