Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
உருளைக்கிழங்கு சீரக வறுவல்
மதிய வேளையில் சாதத்துடன் பொரியல் அல்லது வறுவல் போன்றவை இருந்தால் தான் சாப்பிடுவீங்களா? இன்றைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லையா? குறிப்பாக உருளைக்கிழங்கு பிரியரா? அப்படியெனில் ஒரு சூப்பரான ரெசிபி உள்ளது. அது தான் உருளைக்கிழங்க சீரக வறுவல். இதனை பேச்சுலர்கள் கூட செய்யலாம். அந்த அளவில் இது எளிமையான செய்முறையைக் கொண்டது.
சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு சீரக வறுவலின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 5 (வேக வைத்து, தோலுரித்து நறுக்கியது)
சீரகம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மல்லி தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்ன
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் போட்டு தாளித்து, பெருங்காயத் தூள், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு, தீயை குறைவில் சைத்து வதக்க வேண்டும்
பின்பு மல்லி தூள், மஞ்சள் தூள், மாங்காய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் வேக வைத்து நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு மசாலா உருளைக்கிழங்கில் சேரும் வரை கிளறி, இறக்கி விட வேண்டும்.
இப்போது சூப்பரான உருளைக்கிழங்கு சீரக வறுவல் ரெடி!!!



Click it and Unblock the Notifications
