Latest Updates
-
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்!
வெஜ் சால்னா
உங்கள் வீட்டில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் இருக்கிறதா? அப்படியெனில் அந்த காய்கறிகளைக் கொண்டு சுவையான சால்னா செய்யுங்கள்.
இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யவுள்ளீர்களா? அதற்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் இருக்கிறதா? அப்படியெனில் அந்த காய்கறிகளைக் கொண்டு சுவையான சால்னா செய்யுங்கள். இந்த சால்னா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரியுடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். காய்கறிகளை சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த வெஜ் சால்னாவை செய்து கொடுங்கள், நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு வெஜ் சால்னா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜ் சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காய்கறிகள் - 1 கப் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு)
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* சின்ன தக்காளி - 2 (நறுக்கியது)
* புதினா இலைகள் - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* மீல் மேக்கர் - 1/2 கையளவு
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு...
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 4 பல்
* தக்காளி - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 சிறிய துண்டு
* அன்னாசிப்பூ - 1
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* கல்பாசி - சிறிது
* முந்திரி - 5-6
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
தாளிப்பதற்கு...
* சோம்பு - 3/4 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1
* ஏலக்காய் - 1
செய்முறை:
* முதலில் காய்கறிகள் அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் மற்ற பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் தேங்காயைத் தவிர மற்ற அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் துருவிய தேங்காயை சேர்த்து ஒருமுறை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கி குளிர வைத்துள்ள பொருட்களை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு சிறிது நீரை கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரில் மீல் மேக்கரை சேர்த்து சிறிது உப்பு தூவி மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் மூடியைத் திறந்து, மீல் மேக்கரை சுத்தமான நீரில் ஒருமுறை அலசி, அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, புதினா ஆகியவற்ற சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளி மற்றும் பிற காய்கறிகளை சேர்த்து, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மீல் மேக்கரை சேர்த்து, அரைத்த மசாலாவையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு, 1 1/2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கினால், சுவையான வெஜ் சால்னா தயார்.
Image Courtesy: asmallbite



Click it and Unblock the Notifications












