Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
மணமணக்கும்... ருசியான... வெஜ் புலாவ்
இன்று உங்கள் குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு என்ன செய்து கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காய்கறிகள் உள்ளதா? அப்படியானால் அந்த காய்கறிகளைக் கொண்டு வெஜ் புலாவ் செய்து கொடுங்கள்.
இன்று உங்கள் குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு என்ன செய்து கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காய்கறிகள் உள்ளதா? அப்படியானால் அந்த காய்கறிகளைக் கொண்டு வெஜ் புலாவ் செய்து கொடுங்கள். வெஜ் புலாவ் செய்வது மிகவும் சுலபம். குறிப்பாக மதிய உணவாக குழந்தைகளுக்கு காலை வேளையில் செய்து கொடுக்க ஏற்றதாக இருக்கும். இந்த வெஜ் புலாவை மதிய வேளையிலும் சமைத்து சாப்பிடலாம். பேச்சுலர்கள் கூட செய்வதற்கு ஏற்றதாக இருக்கும்.

உங்களுக்கு வெஜ் புலாவ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜ் புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசுமதி அரிசி - 1 1/2 கப்
காய்கறிகள்...
* காலிஃப்ளவர் - 1/2 கப்
* நறுக்கிய உருளைக்கிழங்கு - 1/2 கப்
* நறுக்கிய கேரட் - 1/4 கப்
* பச்சை பட்டாணி - 1/4 கப்
* குடைமிளகாய் - 1/4 கப்
பிற பொருட்கள்:
* நெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு பல் - 4-5
* பச்சை மிளகாய் - 1-2
* நறுக்கிய கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன்
* புதினா இலைகள் - 2 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 1/2 - 3 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 3-4
* பட்டை - 1 இன்ச்
* அன்னாசிப்பூ - 1 துண்டு
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் ஒருமுறை அலச வேண்டும். பின் கழுவிய அரிசியில் நீரை ஊற்றி 20-30 நிமிடம் ஊற வைத்து, மீண்டும் அரிசியைக் கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு கெட்டியான மற்றும் அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த இஞ்சி-பூண்டு-பச்சை மிளகாய் விழுதை சேர்த்து சில நொடிகள் பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியைப் போட்டு 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரிசியைப் போடு 1-2 நிமிடம் வதக்கிய பின், நீரை ஊற்றி, எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளறிவிட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, காற்றுப்புகாதவாறு மூடி வைத்து, குறைவான தீயில் வைத்து, நீர் வற்றும் வரை அரிசியை வேக வைக்க வேண்டும்.
* சாதம் நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, 5 நிமிடம் கழித்து கிளறி விட வேண்டும். இப்போது சுவையான வெஜ் புலாவ் தயார்.
Image Courtesy: vegrecipesofindia



Click it and Unblock the Notifications
