Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
ஈவ்னிங் டைம்-ல காபி, டீ-க்கு பதிலா.. ஒருமுறை இந்த சூப்பை செஞ்சு கொடுங்க.. எல்லாரும் விரும்பி குடிப்பாங்க..
Veg Clear Soup Recipe In Tamil: சூப் உடலுக்கு மிகவும் நல்லது. சொல்லப்போனால் நாம் சாப்பிடும் காய்கறிகளில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் பெற சிறந்த வழி, அவற்றைக் கொண்டு சூப் தயாரித்து குடிப்பது தான். மாலை வேளையில் எப்போதும் காபி, டீ-யை குடிப்பதற்கு பதிலாக, அவ்வப்போது சூப் தயாரித்து குடித்து வந்தால், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
சூப்புகளில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் வெஜ் க்ளியர் சூப். இந்த சூப் செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். தற்போது தமிழகத்தில் ஆங்காங்கு மழை பெய்து வருவதால் இப்படி சூப் தயாரித்து குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

உங்களுக்கு வெஜ் க்ளியர் சூப் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜ் க்ளியர் சூப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 3 பல் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மற்றும் வெள்ளை ஸ்ப்ரிங் ஆனியன்கள் - 2 (பொடியாக
நறுக்கியது)
* கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் - 2 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 5 கப்
* சோள மாவு - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து
உருகியதும், இஞ்சி, பூண்டு சேர்த்து 1 நிமிடம் மிதமான தீயில் வைத்து
வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், வெள்ளை மற்றும் பச்சை
ஸ்பிரிங் ஆனியன்களை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் காய்கறிகளை 5 நிமிடம் நன்கு பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் நீரை ஊற்றி காய்கறிகள் நன்கு வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகுத் தூளை சேர்த்து கிளறி
விட வேண்டும்.
* பின் அதில் சோள மாவை நீரில் கரைத்து ஊற்றி கிளறி, நன்கு கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான வெஜ் க்ளியர் சூப் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications