Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
வாழைத்தண்டு வாங்குனா ஒருமுறை இப்படி கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..
Vazhaithandu Kootu Recipe In Tamil: அடிக்கடி உணவில் வாழைத்தண்டு சேர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் வாழைத்தண்டு சாப்பிடமாட்டார்களா?
இதுவரை நீங்கள் வாழைத்தண்டு வாங்கினால், அதை பொரியல் தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை வாழைத்தண்டு வாங்கினால், அதைக் கொண்டு கூட்டு செய்யுங்கள். இந்த கூட்டு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். முக்கியமாக இப்படி கூட்டு செய்யும் போது, இதை பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு வாழைத்தண்டு கூட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைத்தண்டு கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 75 கிராம்
* வாழைத்தண்டு - 1 ஜான் அளவு
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* தேங்காய் - 2 சில்லு (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
* சோம்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை நீரில் கழுவிவிட்டு, 20 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின் அந்த பாசிப்பருப்பை குக்கரில் போட்டு, அத்துடன் நறுக்கிய
வாழைத்தண்டு, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், தக்காளி, சாம்பார்
தூள், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட்,
பெருங்காயத் தூள் சேர்த்து, தண்டு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி,
குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து சிறிது
நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* குக்கரில் உள்ள விசில் போனதும், குக்கரைத் திறந்து, அதில் அரைத்த
தேங்காயை சேர்த்து, அந்த குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, 5
நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு சிறு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு,
வரமிளகாயை சேர்த்து தாளித்து, அதை குக்கரில் உள்ள கூட்டுடன் சேர்த்து
கிளறி விட்டு, கரம் மசாலாவை சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வாழைத்தண்டு கூட்டு
தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications