Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
1 கைப்பிடி வேர்க்கடலை இருந்தா.. இந்த ஸ்டைலில் சட்னி செய்யுங்க.. சும்மா தாறுமாறா இருக்கும்..
Varutharacha Verkadalai Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி தான் டிபனாக இருக்குமா? அந்த இட்லிக்கு சட்னி தான் சூப்பர் காம்பினேஷன். அதுவும் தேங்காய் சட்னி, வேர்க்கடலை சட்னி, தக்காளி சட்னி போன்றவை அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வேர்க்கடலை சட்னி பிடிக்குமா? இதனால் அடிக்கடி வீட்டில் வேர்க்கடலை சட்னி செய்வீர்களா?
அப்படியானால் அடுத்தமுறை வேர்க்கடலை சட்னி செய்வதாக இருந்தால், பொருட்களை நன்கு வறுத்து அரைத்து சட்னி செய்யுங்கள். இப்படி சட்னி செய்யும் போது, சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும். மேலும் இந்த பக்குவத்தில் சட்னி செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு வறுத்தரைச்ச வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வறுத்தரைச்ச வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேர்க்கடலை - 1 கையளவு
* பொட்டுக்கடலை - 1 கையளவு
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2
* வரமிளகாய் - 4
* பூண்டு - 2 பல்
* இஞ்சி - 2 சிறிய துண்டு
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய துண்டு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 கையளவு வேர்க்கடலை மற்றும் பொட்டுக்கடலையை சேர்த்து
லேசாக நிறம் மாறும் வரை நன்கு வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காய் மற்றும் புளியை சேர்த்து நன்கு
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கி குளிர வைத்த பொருட்களை சேர்த்து,
அத்துடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொண்டு, சிறிது
நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான வறுத்தரைச்ச வேர்க்கடலை சட்னி
தயார்.



Click it and Unblock the Notifications
