Latest Updates
-
உடல் எடை மடமடன்னு குறைய உதவும் கருப்பு சுண்டல் தோசையும், பீட்ரூட் சட்னியும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 11 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டுமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் மே 14 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது... -
உங்களுக்கு திரும்ப திரும்ப ஒரே கனவு வருதா? அதுக்கு என்ன அர்த்தம்-ன்னு தெரியுமா? -
அன்னையர் தினம் 2026: அம்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கணுமா? இந்த UPI ஆஃபர்களை மிஸ் பண்ணிடாதீங்க! -
மாம்பழ லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அன்னையர் தினத்தில் மனைவி vs அம்மா? இந்த ஒரு சின்ன மாற்றம் போதும், குடும்பத்தில் அமைதி நிலவும்! -
முகத்தில் உள்ள அழுக்கை நீக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ்களை யூஸ் பண்ணுங்க.. -
ஒரே வாரத்தில் 3 முறை நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்.. -
அன்னையர் தினத்தில் இந்த வாஸ்து செடிகளைப் பரிசளிங்க… அம்மாவின் ஆரோக்கியமும் செல்வமும் பல மடங்கு உயரும்!
அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
Varutharacha Chicken Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் சிக்கன் கிரேவியை எப்போதும் ஒரே சுவையில் தான் செய்வீர்களா? இப்படி ஒரே சுவையில் சிக்கனை சமைத்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்தமுறை சிக்கனைக் கொண்டு கிரேவி செய்யும் போது, அந்த கிரேவிக்கு ஸ்பெஷலாக ஒரு மசாலாவை வறுத்து அரைத்து பொடி செய்து, அதைக் கொண்டு கிரேவி செய்யுங்கள்.
இந்த வறுத்தரைச்ச சிக்கன் கிரேவி சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு வறுத்தரைச்ச சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வறுத்தரைச்ச சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 3/4 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 3
* அன்னாசிப்பூ - 1
* வரமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* கறிவேப்பிலை - 2 கொத்து
கிரேவிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சிறிது
* தண்ணீர் - கிரேவிக்கு தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த கழுவிய சிக்கனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி
பூண்டு பேஸ்ட் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கையால் கிளறி
விட்டு, மூடி வைத்து 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, ஏலக்காய்,
கிராம்பு, அன்னசிப்பூ, வரமல்லி, சோம்பு, சீரகம், மிளகு, வரமிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து, நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி, குளிர
வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக பொடி செய்து கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து,
ஏற்கனவே சிக்கனில் உப்பு சேர்த்துள்ளதால், வெங்காயம் வதங்குவதற்கு
மட்டும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் ஊற வைத்துள்ள சிக்கன் மற்றும்
அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து
சிக்கனை 20 நிமிடம் வேக வைக்க வேண்டும். சிக்கன் வேகும் போது
அவ்வப்போது கரண்டியால் கிளறி விட வேண்டும். இல்லாவிட்டால்
அடிபிடித்துவிடும்.
* 20 நிமிடம் சிக்கன் நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, மேலே
கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான வறுத்தரைச்ச சிக்கன் கிரேவி
தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications











