Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தக்காளி சேர்க்காமலேயே வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க..
Varutharacha Chicken Curry Without Tomato: தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டிருப்பதால், இதுவரை கிலோ கணக்கில் தக்காளி வாங்கிக் கொண்டிருந்த பலரும் 1/4 கிலோ தக்காளியை மட்டுமே வாங்குகிறோம். அந்த அளவில் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நிறைய பேர் தக்காளி இல்லாமல் எப்படி சமைப்பது என்பதை அறிய ஆவலாக உள்ளனர். குறிப்பாக அசைவ உணவுகளுக்கு தக்காளி மிகவும் முக்கியம். ஆனால் அந்த அசைவ உணவுகளையும் தக்காளி சேர்க்காமல் சமைக்க முடியும் தெரியுமா?

இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கியுள்ளீர்களா? வீட்டில் தக்காளி இல்லையா? கவலை வேண்டாம். தக்காளி சேர்க்காமலேயே ஒரு சுவையான வறுத்தரைச்ச சிக்கன் குழம்பை செய்யலாம். இந்த சிக்கன் குழம்பு சாதம், சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
உங்களுக்கு தக்காளி சேர்க்காமல் வறுத்தரைச்ச சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சேர்க்காமல் வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* கெட்டியான தேங்காய் பால் - 1/2 முதல் 3/4 கப்
* இஞ்சி - 2 டீஸ்பூன் (தட்டியது)
* பூண்டு - 2 டீஸ்பூன் (தட்டியது)
* பச்சை மிளகாய் - 1
* வினிகர் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* சின்ன வெங்காயம் - 2 (நறுக்கியது)
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 2
* பட்டை - 1 துண்டு
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* கடுகு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு
கொடுத்துள்ள பொருட்களான தேங்காய், சின்ன வெங்காயம், சோம்பு, கிராம்பு,
ஏலக்காய், பட்டை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தேங்காய் பொன்னிறமாகம்
வரை வறுக்க வேண்டும்.
* பின்பு தீயைக் குறைத்து மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள்
சேர்த்து சில நொடிகள் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நீர் சேர்க்காமல்
கொரகொரவென்று முதலில் அரைக்க வேண்டும். பின் சிறிது நீர் ஊற்றி, நன்கு
பேஸ்ட் போல் அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* பின்னர் அரைத்த தேங்காய் விழுது, கிழுவி வைத்துள்ள சிக்கன், வினிகர்
மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
கிளறி, மூடி வைத்து, சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் வெந்து கிரேவி கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் தேங்காய்
பாலை சேர்த்து கிளறி உடனே இறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, வெங்காயத்தை சேர்த்து தாளித்து,
சிக்கன் குழம்புடன் சேர்த்தால், சுவையான தக்காளி சேர்க்காத
வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு தயார்.
Image Courtesy: snazzycuisine



Click it and Unblock the Notifications