Latest Updates
-
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள்
உளுந்து போண்டா
மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது சூடாகவும், காரசாரமாகவும் ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் அதற்கு பஜ்ஜி, போண்டா தான் சரியான தேர்வாக இருக்கும்.
மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது சூடாகவும், காரசாரமாகவும் ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் அதற்கு பஜ்ஜி, போண்டா தான் சரியான தேர்வாக இருக்கும். அதிலும் உளுந்து போண்டா என்றால் இன்றும் அற்புதமாக இருக்கும். அதோடு உளுந்து உடலுக்கு மிகவும் நல்லது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உணவில் உளுந்தை அதிகம் சேர்த்துக் கொள்வதால், உடல் வலிமையாக இருக்கும்.

உங்கள் குழந்தைகள் உளுந்து போண்டாவை விரும்பி சாப்பிட்டால், அதை அடிக்கடி செய்து கொடுக்கலாம் தானே! ஆனால் உங்களுக்கு ருசியான உளுந்து போண்டா எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் கீழே உளுந்து போண்டாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.
MOST READ: மொறுமொறுப்பான... பன்னீர் நக்கட்ஸ்
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் பருப்பு - 1 கப்
* வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 ( பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கையளவு
* கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் உளுத்தம் பருப்பை நீரில் போட்டு 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை கழுவி, கிரைண்டரில் போட்டு, நீர் அதிகம் சேர்க்காமல் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுத்தம் மாவை எடுத்துக் கொண்டு, அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் மாவை சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான உளுந்து போண்டா ரெடி!
* இந்த போண்டாவை அப்படியே சாப்பிடலாம். விருப்பமுள்ளவர்கள் தேங்காய் சட்னியுடனும் சேர்த்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications