Latest Updates
-
அக்டோபர் 17-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெசிபி - உருளைக்கிழங்கை இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரர்கள்! -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பணத்தாசை கொண்டவர்களாம் - இவங்களுக்கு பணம்தான் முக்கியமாம் -
உங்கள் கையில் விதி ரேகை இல்லாமல் இருப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? உண்மை என்னனு தெரிஞ்சிக்கோங்க -
வாஸ்துப்படி இந்த 5 சிலைகளை வீட்டுல வாங்கி வையுங்க.. வீட்டில் பணப்பிரச்சனையே வராது.. -
தலையணைக்கு அடியில் இந்த 5 பொருட்களில் ஒன்றை வைத்து தூங்குவது உங்களுக்கு சகல நன்மைகளையும் கொடுக்குமாம் -
1 கப் அவலும், 1 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
2 முட்டை இருந்தா இந்த மாதிரி அவிச்ச முட்டை ஆம்லெட் ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா வேற லெவலில் இருக்கும் -
உங்க தலைமுடி வறண்டு தேங்காய் நார் போல் இருக்கா? அப்ப வீட்டிலேயே இந்த கெரட்டின் ஹேர் மாஸ்க்கை போடுங்க..
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க..
Ulunthu Kanji Recipe In Tamil: உங்களுக்கு கை, கால், மூட்டு வலி அதிகமா இருக்குதா? இந்த வலியைப் போக்கி உங்கள் எலும்புகளை வலுவாக்க வேண்டுமா? அப்படியானால் தினமும் காலை, மாலை வேளைகளில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக உளுந்து கஞ்சியை செய்து குடியுங்கள். இந்த உளுந்து கஞ்சியில் புரோட்டீன், இரும்புச்சத்து, கால்சியம் போன்றவை அதிகம் உள்ளன.

இவை எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலுவாக்குவதோடு, உடலுக்கு ஆற்றலை அளிக்கும். அதுவும் வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால், அவர்களுக்கு இந்த கஞ்சியை அடிக்கடி செய்து கொடுத்தால், அவர்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, இடுப்பெலும்பும் வலுவடையும். முக்கியமாக இந்த கஞ்சி ருசியாக இருப்பதால், குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.
உங்களுக்கு இந்த உளுந்து கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உளுந்து கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கஞ்சி பவுடர் செய்வதற்கு...
* உளுத்தம் பருப்பு - 1 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* பச்சரிசி - 3 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 3
கஞ்சி செய்வதற்கு..
* கஞ்சி பவுடர் - 4 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1 கப் + 4 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* நாட்டுச்சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* தேங்காய் பால் - 1 கப்
* நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பை
சேர்த்து நல்ல மணம் வந்து நிறம் மாறும் வரை வறுத்து, ஒரு தட்டில்
போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியில் பாசிப்பருப்பை சேர்த்து, அதையும் பொன்னிறமாக
வறுத்து, அதே தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மீண்டும் அந்த வாணலியில் பச்சரிசியை சேர்த்து நன்கு பொரிய
விட்டு இறக்கி, அதையும் அதே தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* அனைத்து பொருட்களும் குளிர்ந்த பின், அவற்றை மிக்சர் ஜாரில்
சேர்த்து, அத்துடன் ஏலக்காயை சேர்த்து நன்கு அரைத்து பொடி செய்து
கொள்ள வேண்டும். இப்போது உளுந்து கஞ்சி பவுடர் தயார்.
* அடுத்து ஒரு கிண்ணத்தில் 4 டேபிள் ஸ்பூன் கஞ்சி பவுடரை எடுத்து,
அதில் 1 கப் நீரை ஊற்றி கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு அகலமான பாத்திரத்தில் 4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து,
நீர் சூடானதும், அதில் கரைத்து வைத்துள்ள கஞ்சி மிக்ஸரை ஊற்றி, நன்கு
கெட்டியாகும் வரை கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* கஞ்சியானது சற்று கெட்டியானதும், அதில் உப்பு, நாட்டுச்சர்க்கரையை
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் கிளறி விட்டு
கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அடுப்பை அணைத்துவிட்டு, அதில் தேங்காய் பாலை ஊற்றி,
அத்துடன் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கலந்து இறக்கினால், சுவையான
உளுந்து கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications
