Latest Updates
-
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு!
1/4 கப் உளுந்தும், தேங்காயும் இருக்கா? அப்ப இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. அருமையா இருக்கும்...
Ulundu Chutney Recipe In Tamil: தினமும் காலையில் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி செய்து போரத்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் உளுத்தம் பருப்பு ம், தேங்காயும் உள்ளதா? அப்படியானால் இவ்விரு பொருட்களையும் கொண்டும் சுவையான உளுந்து சட்னி தயார். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சத்தானமும் கூட.

உங்களுக்கு உளுத்தம் பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உளுந்து சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் பருப்பு - 1/4 கப்
* பச்சை மிளகாய் - 5
* தேங்காய் - 1/4 கப்
* சின்ன வெங்காயம் - 5
* புளி - 1 டீஸ்பூன்
* பூண்டு - 4
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பை சேர்த்து மிதமான தீயில் வைத்து
பொன்னிறமாக நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, புளி
ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வறுக்க
வேண்டும்.
* பின்பு வத்க்கிய பொருட்களை இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில்
போட்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தல் மாற்றிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடனதும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து
சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான உளுந்து சட்னி தயார்.
Image Courtesy: rakskitchen



Click it and Unblock the Notifications
