Latest Updates
-
நவம்பர் 17, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சூரிய கூட்டணி: இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - எந்தெந்த ராசிகள் தெரியுமா? -
குளிர்காலத்தில் சரும வறட்சியை அதிகம் சந்திக்குறீங்களா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
சேமியாவை வைச்சு உப்புமா செய்யாம இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
Hair Care: உங்க முடியை பளபளப்பாக, ஆரோக்கியமாக மாற்றும் வெந்தய மாஸ்க்கை எப்படி வீட்டிலேயே செய்யலாம் தெரியுமா? -
இந்த 4 ராசி குழந்தைகள் ரொம்ப பிடிவாதக்காரர்களாக இருப்பார்களாம் - உங்க குழந்தை ராசி இதுல இருக்கா? -
1 கைப்பிடி முருங்கைக்கீரையும், சீஸும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இதுல உங்களுக்குப் பிடித்த ஒரு கண்ணைத் தேர்வு செய்யுங்க.. உங்கள் ஆளுமையின் ரகசியத்தை சொல்றோம்.. -
Expiry Date மற்றும் Best Before உள்ள வேறுபாடு என்ன தெரியுமா? இது தெரியாம எந்த பொருளையும் வாங்காதீங்க
உடுப்பி தேங்காய் சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. வேற லெவல்-ல இருக்கும்..
Udupi Thengai Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசை தான் உங்கள் வீட்டில் டிபனாக இருக்குமா? அந்த இட்லி, தோசைக்கு எப்போதும் ஒரே சுவையில் மற்றும் ஒரே சட்னியை தான் திரும்ப திரும்ப செய்வீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் தேங்காய் சட்னியைத் தான் அதிகம் செய்வீர்களானால், எப்போதும் ஒரே ருசியில் தேங்காய் சட்னியை செய்யாமல், ஒருமுறை உடுப்பி தேங்காய் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாப இருப்பதோடு, சுவை பிரமாதமாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த உடுப்பி தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உடுப்பி தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 1
* பூண்டு - 3 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 3
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பொட்டுக்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* புதினா - 10 இலைகள்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், 2 டீஸ்பூன் வேர்க்கடலையை சேர்த்து நன்கு வறுக்க
வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு சேர்த்து வறுக்க
வேண்டும்.
* பின்பு அதில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொட்டுக்கடலை, புளி, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
துருவிய தேங்காய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, முதலில் அரைக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் சிறிது நீரை ஊற்றி, அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து, கொரகொரவென்று
அரைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில்
நீரை ஊற்றி அலசி, சட்னியுடன் சேர்க்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான உடுப்பி தேங்காய்
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
