Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
1/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் வெச்சு ஒருமுறை இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்..
Tomato Pachadi Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு ஒரு அருமையான அதே சமயம் இதுவரை செய்திராத சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வேர்க்கடலை மற்றும் தக்காளி உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அற்புதமான சுவையில் ஒரு பச்சடி செய்யுங்கள்.
இந்த தக்காளி பச்சடி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் இது காலையில் செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாகவும் இருக்கும். இது சற்று புளிப்பாக இருப்பதால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு தக்காளி பச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி பச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேர்க்கடலை -1/4 கப்
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 7
* தக்காளி - 3 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - 1 கட்டு (சுத்தம் செய்தது)
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையைப்
போட்ட, மிதமான தீயில் வைத்து நிறம் மாறாமல் வறுத்து இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதை ஒரு தட்டில் போட்டு குளிர்ந்ததும், தோலை நீக்கிவிட்டு
தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, மிளகாய் வெள்ளை
நிறத்தில் மாறும் வரை வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
கிளறி, மூடி வைத்து 3-4 நிமிடம் தக்காளி நன்கு மென்மையாக வதங்கும் வரை
வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் சுத்தம் செய்த ஒரு கொத்தமல்லியை சேர்த்து 2 நிமிடம்
வதக்கி விட வேண்டும். பின் அதில் வதக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை
சேர்த்து ஒருமுறை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வேர்க்கடலையை சேர்த்து ஓரளவு கொரகொரவென்று
பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கிய தக்காளி கலவையை சேர்த்து ஒரளவு திரித்திரியாக
அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி
பச்சடி தயார்.
Image Courtesy: Apoorvas Nalabagam



Click it and Unblock the Notifications
