Latest Updates
-
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் - கர்நாடகா ஸ்பெஷல் கசகசா பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க செமையா இருக்கும் -
உங்க முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தேனை கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
தமிழ்நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நதி எது தெரியுமா? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
இந்த ஆண்டின் கடைசி 4 மாதங்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது... -
கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் தேவைப்படுகிறது? கொசுக்கள் கடித்தால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? -
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் ரவா லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
ஹை பிபி இருக்கா? மருந்து மாத்திரை இல்லாமலேயே பிபி-யை குறைக்கணுமா? அப்ப இந்த 5 பானங்களை குடிங்க..
10 நிமிடத்தில் இட்லி, தோசைக்கு அட்டகாசமான தக்காளி கடையலை செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..
Tomato Kadayal Recipe In Tamil: காலையில் எப்போதும் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? அந்த இட்லி தோசைக்கு பெரும்பாலும் சட்னி, சாம்பார் தான் செய்வீர்களா? எப்போதும் அதையே செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் தக்காளி நிறைய இருக்கா?
அப்படியானால் அந்த தக்காளியைக் கொண்டு அட்டகாசமான சுவையில் தக்காளி கடையல் ரெசிபியை செய்யுங்கள். இது செய்வதற்கு சுலபமாக இருக்கும். மேலும இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு தக்காளி கடையல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கடையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் -2
* பூண்டு - 15 (தட்டியது)
* சின்ன வெங்காயம் - 25 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 1/2 டம்ளர்
* அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் பூண்டு மற்றும்
சின்ன வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சாம்பார் தூள், மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து கிளறி, 1 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 2
விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, வேக வைத்த தக்காளியை ஒரு
பாத்திரத்தில் ஊற்றி, மத்து கொண்டு நன்கு கடைந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியில் கடைந்த தக்காளியை ஊற்றி, அத்துடன் அரிசி மாவை
நீரில் கரைத்து ஊற்றி கிளறி, அடுப்பில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க
வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான தக்காளி கடையல்
தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications