Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வெற்றியின் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் - கர்நாடகா ஸ்பெஷல் கசகசா பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க செமையா இருக்கும் -
உங்க முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தேனை கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
தமிழ்நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நதி எது தெரியுமா? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
இந்த ஆண்டின் கடைசி 4 மாதங்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது... -
கொசுக்களுக்கு ஏன் மனித இரத்தம் தேவைப்படுகிறது? கொசுக்கள் கடித்தால் ஏன் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? -
செப்டம்பர் மாதத்தில் வெற்றிகளையும், கோடிகளையும் குவிக்கும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வரலட்சுமி விரதம் ஸ்பெஷல் ரவா லட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க..
தக்காளி சட்னியுடன் இந்த ஒரு பொருளை மட்டும் எக்ஸ்ட்ரா சேர்த்துக்கோங்க... டேஸ்ட் செமயா இருக்கும்..
Tomato Chutney: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு பெரும்பாலும் தக்காளி சட்னியை தான் செய்வீர்களா? அப்படியானால் வழக்கமாக செய்யும் தக்காளி சட்னியைப் போன்று செய்யாமல், சற்று வித்தியாசமாக முறையில் ட்ரை செய்யுங்கள்.
இந்த மாதிரி தக்காளி சட்னியை ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி இப்படி தான் செய்வீர்கள். ஏனெனில் அந்த அளவில் சுவை அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன
* பூண்டு - 10 பல்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பெரிய தக்காளி - 5 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் - 1/4 மூடி (துருவியது)
தாளிப்பதற்கு...
* பூண்டு - 10 பல்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 கடுகு
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும்,
உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து கறிவேப்பிலை சேர்த்து பொரியவிட்டு, தக்காளியை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் தேங்காய் சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு இறக்கி, குளிர
வைக்க வேண்டும்.
* பின்பு அரைத்து வைத்துள்ளதை மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு அரைத்து,
ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
பூண்டு பற்களை தட்டிப் போட்டு நன்கு நிறம் மாறும் வரை வதக்கி,
சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி சட்னி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications