Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
Tomato Bhaji Recipe: தக்காளி பாஜி
உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறார்களா? அதற்கு சற்று புளிப்பான மற்றும் சுவையான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் தக்காளி பாஜி செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறார்களா? அதற்கு சற்று புளிப்பான மற்றும் சுவையான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் வீட்டில் வெங்காயம், தக்காளி மற்றும் சில மசாலா பொடிகள் இருந்தால், எளிய முறையில் ஒரு சைடு டிஷ் செய்யலாம். இதன் பெயர் தக்காளி பாஜி. இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, இடியாப்பத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குறிப்பாக இது பேச்சுலர்களுக்கு ஏற்ற சைடு டிஷ் ரெசிபி.

இந்த தக்காளி பாஜி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி பாஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 4 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொட்டுக்கடலை மற்றும் சோம்பை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் பொட்டுக்கடலை பொடியை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், தக்காளி பாஜி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications