Latest Updates
-
டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை - மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா? - விளக்கும் மார்பகப் புற்றுநோய் நிபுணர்! -
சனி பகவான் ஆசியால் அடுத்த 118 நாட்கள் இந்த 5 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா இருப்பாங்க.. உங்க ராசி என்ன? -
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க.. -
சோப்பு நுரை ஏன் எப்போதும் வெள்ளை நிறத்தில் மட்டும் உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன?
மணமணக்கும்.. தட்டப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்..
Thattapayaru Kuzhambu Recipe In Tamil: புரட்டாசி மாதம் என்பதால் அசைவ உணவுகளை நிறைய பேர் சாப்பிடமாட்டார்கள். அப்படிப்பட்ட சூழலில் அசைவ உணவின் மீதான ஏக்கத்தை போக்கும் வகையில் சைவ உணவுகளை சாப்பிட நினைப்பார்கள். அப்படி அசைவ உணவுக்கு இணையான சுவையைக் கொண்ட குழம்பு தான் தட்டப்பயறு குழம்பு.

அதுவும் தட்டப்பயறுடன் கத்திரிக்காய் சேர்த்து குழம்பு செய்யும் போது, வீடே மணக்கும். சொல்லப்போனால் குழம்பு கொதித்துக் கொண்டிருக்கும் போதே பசி எடுக்கத் தொடங்கிவிடும். அந்த அளவில் இந்த குழம்பு சுவையாக இருக்கும். இந்த குழம்பை சாதத்துடன் மட்டுமின்றி, இட்லியுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
உங்களுக்கு இந்த தட்டப்பயறு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தட்டப்பயறு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தட்டப்பயறு - 1 கப் (இரவு முழுவதும் ஊற வைத்தது)
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 6 பல்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கத்திரிக்காய் - 4 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* புளி - எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
* வேக வைத்த தட்டப்பயறு
* அரைத்த தேங்காய் விழுது
அரைப்பதற்கு...
* தேங்காய் - 2 சில்லு (நறுக்கியது)
* வேக வைத்த தட்டப்பயறு - 2 ஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு குக்கரில் ஊற வைத்த தட்டப்பயறை எடுத்துக் கொண்டு,
அதில் நீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து குக்கரை மூடி அடுப்பில்
வைத்து 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து கிளறி, மூடி
வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* கத்திரிக்காய் வெந்த பின் அதில் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள்
சேர்த்து ஒருமுறை கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, அதன் பின் புளிச்சாற்றினை
சேர்த்து, பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் வேக வைத்த தட்டைப்பயறை நீருடன் அப்படியே சேர்த்து 3
நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், வேக வைத்த தட்டப்பயறு, சோம்பு
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அரைத்த தேங்காய் விழுதை கொதித்துக் கொண்டிருக்கும்
குழம்புடன் சேர்த்து, உப்பு சுவை பார்த்து 2 நிமிடம் நன்கு கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான தட்டப்பயறு குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications
