தட்டைப்பயறு வெச்சு இப்படி குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பே தோத்துப் போயிடும்...

Posted By:

Thatta Payaru Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் தினமும் கறிக்குழம்பை எதிர்பார்க்கிறார்களா? அதற்காக தினமும் கறி வாங்கி சமைக்க முடியாது அல்லவா? ஆனால் கறிக்குழம்பு சுவையில் தட்டைப்பயறு கொண்டு குழம்பு செய்யலாம்.

இந்த தட்டைப்பயறு குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும்.

Thatta Payaru Kuzhambu How To Make a Thattai Payaru Kulambu Recipe

உங்களுக்கு தட்டைப்பயறு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தட்டைப்பயறு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* தட்டைப்பயறு - 1 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப

வதக்கி அரைப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 8
* பூண்டு - 10 பல்
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2
* குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 2 (தோல் நீக்கி துண்டுகளாக்கப்பட்டது)
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டைப்பயறை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த தட்டைப்பயறை குக்கரில் போட்டு, அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து பொரிய விட்டு, பின் அதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து, நீர் வற்றும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து, குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* பின் அதில் உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து, மசாலா உருளைக்கிழங்கில் சேரும் வரை கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்துள்ள தட்டைப்பயறை நீருடன் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, நன்கு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான தட்டைப்பயறு குழம்பு தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, January 2, 2025, 14:57 [IST]
Desktop Bottom Promotion