Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா?
சப்பாத்திக்கு ஒருமுறை தக்காளி வெச்சு இந்த சைடு டிஷ் செய்யுங்க.. டக்கரா இருக்கும்..
Thakkali Thokku Recipe In Tamil: அடிக்கடி உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் குருமா தான் செய்வீர்களா? அதுவும் ஒரே மாதிரி தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் புளிப்பாக சைடு டிஷ் கேட்கிறார்களா? அப்படியானால் வீட்டில் தக்காளி அதிகமாக இருந்தால், தக்காளி தொக்கு செய்யுங்கள்.
இந்த தக்காளி தொக்கு செய்வதற்கு வீட்டில் உள்ள ஒருசில பொருட்களே போதுமானது. 10 நிமிடத்தில் டக்கென்று செய்யலாம். முக்கியமாக இந்த தக்காளி தொக்கு சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 4 (பொடியாக நக்கியது)
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 டம்ளர்
* நாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும்
வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு பச்சை வாசனை
போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மிதமான தீயில் வைத்து
நன்கு 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, நாட்டுச் சர்க்கரை சேர்த்து
கிளறி அடுப்பை அணைத்தால், சுவையான தக்காளி தொக்கு தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications
