Latest Updates
-
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு!
3 தக்காளியும், 1 கட்டு புதினாவும் இருக்கா? இந்த மாதிரி சட்னி பண்ணுங்க.. செம டேஸ்டியா இருக்கும்...
Thakkali Pudina Chutney Recipe In Tamil: இன்னைக்கு காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போறீங்களா? அதுக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்து கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு உதவ தானே நாங்க இருக்கோம். இப்ப பாருங்க ஒரு அட்டகாசமான ஐடியாவை தரோம்.
அது என்னன்னா, உங்கள் வீட்டில் தக்காளியும், புதினாவும் இருக்கா? அப்படின்னா செம டேஸ்டியா ஒரு சட்னி செய்யலாம். இந்த சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அருமையா இருக்கும். முக்கியமாக இது 10 நிமிஷத்தில் செய்யக்கூடிய வகையில் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு தக்காளி புதினா சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி புதினா சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புதினா - 2 கப் (1 கட்டு)
* கொத்தமல்லி - 1/4 கப்
* புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு
* பச்சை மிளகாய் - 6-7
* சின்ன வெங்காயம் - 3-4 ((நறுக்கியது))
* தக்காளி - 3 (நறுக்கியது)
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து
பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* அதன் பின் பச்சை மிளகாய், சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி
விட வேண்டும்.
* பின்பு தக்காளி மற்றும் புளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் கொத்தமல்லி மற்றும் புதினாவை
சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள்
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி
புதினா சட்னி தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications
