Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
Thaipusam 2026: தைப்பூசம் நாளில் இந்த திருச்செந்தூர் ஸ்பெஷல் திருப்பாகம் செய்யுங்க.. டேஸ்ட் செமயா இருக்கும்..
Thaipusam 2026: முருகனுக்கு உகந்த தைப்பூசம் வருகிற பிப்ரவரி 01 ஆம் தேதி வருகிறது. இந்நாளில் முருகப்பெருமானின் ஆசியைப் பெற பக்தர்கள் விரதமிருந்து, பூஜைகளை செய்து வழிபாடு செய்வார்கள். முக்கியமாக முருகனுக்கு பிடித்த பலகாரங்களை செய்து பிரசாதமாக படைத்து வழிபடுவார்கள்.
நீங்கள் இந்த தைப்பூசம் நாளில் முருகனுக்கு பிடித்ததை செய்து படைத்து வழிபட நினைக்கிறீர்களா? அப்படியானால் திருச்செந்தூர் ஸ்பெஷல் திருப்பாகம் செய்யுங்கள். இந்த திருப்பாகம் செய்வது மிகவும் சுலபம். இதை வெறும் 10 நிமிடத்தில் செய்யலாம். ஒருமுறை இந்த திருப்பாகத்தை வீட்டில் செய்தால், பின் அடிக்கடி செய்து தரச்சொல்லி கேட்பார்கள்.

உங்களுக்கு திருச்செந்தூர் ஸ்பெஷல் திருப்பாகத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே திருச்செந்தூர் ஸ்பெஷல் திருப்பாகம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கெள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முந்திரி - 50 கிராம்
* கடலை மாவு - 1/2 கப்
* காய்ச்சிய பால் - 1 கப்
* நெய் - 1/2 கப் (50-100 மிலி)
* சர்க்கரை - 100 கிராம்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் முந்திரியை மிக்சர் ஜாரில் போட்டு, விட்டு விட்டு
அரைத்து மென்மையாக பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை எடுத்து, அதில் கடலை மாவை சலித்து எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அந்த வாணலியை அடுப்பில் வைத்து, பச்சை வாசனை போக வறுக்க
வேண்டும்.
* பின்பு அதில் காய்ச்சிய பாலை ஊற்றி கட்டிகளின்றி கரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* சர்க்கரை நன்கு கரைந்ததும், அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கொஞ்சம்
கொஞ்சமாக 50-100 மிலி நெய்யை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* கலவையானது நன்கு அல்வா போன்ற பதத்திற்கு திரண்டு வந்து, நெய்
பிரிந்து வரும் போது, அதை இறக்கினால், சுவையான திருச்செந்தூர் ஸ்பெஷல்
திருப்பாகம் தயார்.



Click it and Unblock the Notifications