டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..

Posted By:

Tea Kadai Style Kadalai Maavu Bonda Recipe In Tamil: பருவமழை ஆரம்பித்துவிட்டதால், மழை பெய்யும் போது மாலை வேளையில் சூடாகவும், மொறுமொறுவென்றும் சாப்பிட தோன்றும். அதுவும் வடை, பஜ்ஜி, போண்டா என்று தான் பலருக்கும் சாப்பிட பிடிக்கும். உங்களுக்கு டீக்கடை ஸ்டைல் போண்டா, வடை, பஜ்ஜி டேஸ்ட் பிடிக்குமா? அப்படியானால் உங்கள் வீட்டில் கடலை மாவும், அரிசி மாவும் இருந்தால், அவற்றைக் கொண்டு டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா செய்யுங்கள். இந்த போண்டா வித்தியாசமான சுவையில் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

Tea Kadai Style Kadalai Maavu Bonda How To Make Kadalai Maavu Bonda Recipe

உங்களுக்கு இந்த டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* கடலை மாவு - 200 கிராம்
* பச்சரிசி மாவு - 50 கிராம்
* சூடான எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுடக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுடக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுடக்கியது)
* பூண்டு - 3 பல் (பொடியாக நறுடக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுடக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 150 மிலி
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் பச்சரிசி மாவை எடுத்துக் கொண்டு, கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெயை ஊற்றி கரண்டியால் கிளறி, கைப்பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கைகளால் நன்கு பிசைந்து கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு, பெருங்காயத் தூள், சோடா உப்பு, சோம்பு, சீரகம் சேர்த்து கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, போண்டா மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் போண்டா மூழ்கும் அளவிலான எண்ணெயை ஊற்றி, நன்கு சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் நன்கு சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை கையில் கொஞ்சமாக எடுத்து, எண்ணெயில் போட வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் போண்டாக்களாக எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, September 30, 2026, 16:17 [IST]
Desktop Bottom Promotion