Latest Updates
-
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம்
ருசியான... தவா பன்னீர் மசாலா
உங்கள் வீட்டில் இன்று சப்பாத்தி என்றால், அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று நிச்சயம் யோசித்துக் கொண்டிருப்பீர்கள். அப்படிப்பட்டவர்கள், சப்பாத்திக்கு அற்புதமான தவா பன்னீர் மசாலாவை செய்யலாம்.
பல வீடுகளில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். உங்கள் வீட்டில் இன்று சப்பாத்தி என்றால், அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று நிச்சயம் மதியத்தில் இருந்து யோசித்துக் கொண்டிருப்பீர்கள். அப்படிப்பட்டவர்கள், இன்று சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ்ஷாக தவா பன்னீர் மசாலாவை செய்து வீட்டில் உள்ளோரை அசத்தலாம். இது ஒரு எளிமையான ரெசிபி. முக்கியமாக 15 நிமிடத்தில் செய்து முடிக்கக்கூடிய அளவில் ஈஸியானது.

உங்களுக்கு தவா பன்னீர் மசாலாவை ஈஸியாக எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையைப் படித்து பின்பற்றுங்கள். இது நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ளோரின் நாவிற்கு விந்தளிக்கும் வகையில் ருசியான ஒன்றாக இருக்கும். இப்போது தவா பன்னீர் மசாலாவின் செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 1 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (அரைத்துக் கொள்ளவும்)
* குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 3/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* காய்ந்த வெந்தய கீரை - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* தவா பன்னீர் மசாலா செய்வதற்கு முதலில் தவா தேவை. ஒருவேளை தவா இல்லாவிட்டால், கடாயை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இப்போது ரெசிபிக்கு போகலாம்.
* அடுப்பில் தவாவை வைத்து, அதில் வெண்ணெயைப் போட்டு உருகியதும், சீரகத்தைப் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு, நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து ஒருமுறை கிளறி, மிளகாய் தூள், சீரகப் கொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
* தக்காளி நன்கு வெந்து பச்சை வாசனை போன பின், மசாலாவானது நீரின்றி வறண்டு இருக்கும். அப்போது சிறிது நீர் தெளித்து, பன்னீர் துண்டுகளை சேர்த்து, மசாலா பன்னீருடன் சேருமாறு நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியில் அதன் மேல் காய்ந்த வெந்தய கீரையை கையால் நசுக்கி தூவி, கொத்தமல்லியையும் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான தவா பன்னீர் மசாலா தயார்!
குறிப்பு:
* மசாலா பொடிகளை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
* மேலே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு செமி கிரேவி. உங்களுக்கு கிரேவி அதிகம் வேண்டுமானால், இன்னொரு தக்காளியை அரைத்து ஊற்றலாம்.
* தக்காளியை அரைத்து ஊற்ற விரும்பாதவர்கள், அப்படியே துண்டுகளாக்கியும் பயன்படுத்தலாம்.



Click it and Unblock the Notifications











