Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
விநாயகர் சதுர்த்திக்கான ஸ்பெஷல் படையல் ரெசிபிக்கள்!!!
விநாயகர் சதுர்த்தி என்று சொன்னாலே கொழுக்கட்டை, சுண்டல், பொரிக்கடலை போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். அதுமட்டுமின்றி, வேறு சில பலகாரங்களையும் வீட்டில் செய்து, விநாயகருக்கு படைக்கலாம். அதிலும் விநாயகரை 3 முதல் 9 நாட்கள் வரை வீட்டில் வைத்து, அவருக்கு பல்வேறு பலகாரங்களை செய்து நிவேத்தியம் செய்வார்கள். அப்படி நிவேத்தியம் செய்யும் போது, எப்போதும் ஒரே ரெசிபிக்களை செய்து கொடுப்பதற்கு பதிலாக, சில வித்தியாசமான ரெசிபிக்களையும் செய்து படைக்கலாம்.
ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, விநாயகருக்கு நிவேத்தியம் செய்வதற்கு சில ஸ்நாக்ஸ் போன்ற ரெசிபிக்களை பட்டியலிட்டுள்ளது. அதைப் படைத்து, அவற்றை செய்து விநாயகருக்கு படைத்து, விநாயகரின் அருளைப் பெற்று, அந்த ஸ்நாக்ஸ்களை சாப்பிட்டு மகிழுங்கள்.

பூர்ண கொழுக்கட்டை
விநாயகர் சதுர்த்தியின் ஸ்பெஷலே கொழுக்கட்டை தான். அதிலும் பூர்ண கொழுக்கட்டை பெரும்பாலான வீடுகளில் சாதாரணமாக செய்யக்கூடியது. இதுவும் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டது.

கோதுமை அப்பம்
விநாயகருக்கு தானியங்களுள் ஒன்றான கோதுமையைக் கொண்டும் ஒரு தின்பண்டம் செய்து படைக்கலாம். இது செய்வது மிகவும் எளிமையானது.

எள்ளுருண்டை
எள்ளுண்டை கூட விநாயகருக்கு மிகவும் பிடித்தமானதொரு உணவுப்பொருளாகும். மேலும் இது ஆரோக்கியமானதும் கூட.

மோத்தி சூர் லட்டு
விநாயகருக்கு லட்டு என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே விநாயகர் சதுர்த்திக்கு லட்டு செய்யலாம்.

வேர்க்கடலை சுண்டல்
கணபதிக்கு சுண்டல் என்றாலும் பிடிக்கும். சுண்டலில் எத்தனையோ வகைகள் உள்ளன. பெரும்பாலும் கொண்டைக்கடலைக் கொண்டு தான் சுண்டல் செய்வோம். ஆனால் இந்த வருடம் சற்று வித்தியாசமாக வேர்க்கடலைக் கொண்டு சுண்டல் செய்யலாமே!

வறுத்த தேங்காய் வெல்லக் கொழுக்கட்டை
கொழுக்கட்டையை ஒவ்வொரு விதத்தில் சமைப்பார்கள். அதில் பொதுவாக வேக வைப்பது தான். ஆனால் மகாராஷ்டிராவில் கொழுக்கட்டையை பொரிப்பார்கள். எனவே இந்த ரெசிபியையும் முயற்சிக்கலாம்.

கோதுமை ரவை பாயாசம்
பாயாசம் இல்லாத பண்டிகையே இல்லை என்று சொல்லலாம். அதிலும் எப்போதும் ஒரே மாதிரியான பாயாசத்தை செய்யாமல், இந்த முறை கோதுமை ரவைக் கொண்டு பாயாசம் செய்து, கணபதிக்கு படைக்கலாம்.

வாழைப்பழ ஆப்பிள் கஞ்சி
எப்போதும் கொழுக்கட்டை மட்டும் தான் செய்து விநாயகருக்கு படைக்க வேண்டும் என்பதில்லை. வரும் விநாயகர் சதுர்த்திக்கு சற்று வித்தியாசமாக வாழைப்பழம், ஆப்பிள், ஓட்ஸ் போன்றவற்றை கொண்டு கஞ்சி செய்தும் படைக்கலாம்.



Click it and Unblock the Notifications
