Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
ஃபுரூட் டீ
டீயில் எத்தனையோ வெரைட்டிகள் உள்ளன. ஒவ்வொரு டீயும் ஒவ்வொருவிதமான சுவையில் இருக்கும். அந்த வகையில் பழங்களைக் கொண்டும் டீ செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், பழங்களை கொண்டும் அருமையான சுவையில், உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருமாறு டீ செய்யலாம். மேலும் உடல் எடையை குறைக்க நினைப்போர், இந்த டீயை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சரி, இப்போது அந்த ஃபுரூட் டீ ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்...

தேவையான பொருட்கள்:
க்ரீன் டீ பேக் - 2
தண்ணீர் - 1 1/2 கப்
ஆரஞ்சு ஜூஸ் - 1 கப்
தேன் - 1 கப்
எலுமிச்சை ஜூஸ் - 1/2 கப்
இஞ்சி சாறு - 1/2 டீஸ்பூன்
ஐஸ் கட்டி - 3-4
செய்முறை:
முதலில் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு, அந்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் க்ரீன் பேக்குகளை டீயின் நிறம் வரும் வரை ஊற வைத்து, குளிர வைக்க வேண்டும்.
பின்னர் அதில் ஆரஞ்சு ஜூஸ், தேன், எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாறு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின்பு அதனை டம்ளரில் ஊற்றி, அதில் ஐஸ் கட்டிகளைப் போட்டு பரிமாறினால், சூப்பரான ஃபுரூட் டீ ரெடி!!!



Click it and Unblock the Notifications
