Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
வறுத்த தேங்காய் வெல்ல மோதகம்
கணபதிக்கு கொழுக்கட்டை, மோதகம் என்றால் மிகவும் பிடிக்கும். பொதுவாக கொழுக்கட்டையை வேக வைத்து செய்வோம். ஆனால் மகாராஷ்டிராவில் கொழுக்கட்டை போன்று காணப்படும் மோதகத்தை பொரித்து, விநாயகருக்கு படைப்பார்கள். எனவே இந்த வருடம் விநாயகருக்கு எப்போதும் செய்யப்படும் கொழுக்கட்டையை மட்டும் செய்யாமல், சற்று வித்தியாசமாக மோதகம் செய்து படைக்கலாமே!
சரி, இப்போது மகாராஷ்டிரா ஸ்டைல் தேங்காய் வெல்ல மோதகத்தின் செய்முறைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
மைதா மாவு - 1/2 கப்
நாட்டுச்சர்க்கரை - 1 கப்
தேங்காய் - 1 கப் (துருவியது)
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
நெய் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
செய்முறை:
முதலில் கோதுமை மாவு மற்றும் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, வெதுவெதுப்பான நீர் மற்றும் நெய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து. 15-20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் ஊற்ற காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பௌலில் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் மற்றும் வதக்கி வைத்துள்ள தேங்காயைப் போட்டு, கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, கையால் தட்டையாக தட்டி, அதன் நடுவே தேங்காய் கலவையை சிறிது வைத்து, படத்தில் காட்டியவாறு செய்து தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான தேங்காய் வெல்ல மோதகம் ரெடி!!!
Image Courtesy: spiceupthecurry



Click it and Unblock the Notifications
