Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
இனிப்பான... தேங்காய் கச்சோரி
வார இறுதியில் வீட்டில் இருக்கும் போது, ஏதேனும் சற்று வித்தியாசமான டிஸ் அல்லது ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதுவும் மாலை நேரத்தில் இனிப்பான ஸ்நாக்ஸ் என்றால் அனைவருமே விரும்பி சாப்பிடுவர். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதற்கு தேங்காய் கச்சோரி தான் மிகவும் சிறந்தது. அது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
மைதா - 5 கப்
தேங்காய் - 2 கப் (துருவியது)
ஏலக்காய் - 2
இலவங்கப்பட்டை - 2
நெய் - 6 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஏலக்காய் மற்றும் பட்டையை நன்கு பொடி செய்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் மைதா, நெய், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு, மென்மையாக சப்பாத்தி மாவைப் போல் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு மற்றொரு சிறு பாத்திரத்தில் துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய், பட்டை பொடியை கலந்து வைத்துக் கொள்ளவும்.
பின் பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவை சிறு உருண்டைகளாக செய்து, அதில் கட்டை விரளால் சிறு ஓட்டை போட்டு, அதில் சிறிது இந்த தேங்காய் கலவையை வைத்து மூடி வைக்கவும். இதேப் போல் அனைத்து மாவுகளையும் செய்ய வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் இந்த உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான தேங்காய் கச்சோரி ரெடி!!!



Click it and Unblock the Notifications
