Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
ராகி மாவும், வெல்லமும் இருந்தா.. இந்த மாதிரி ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. சூப்பரா இருக்கும்...
Sweet Ragi Poori Recipe In Tamil: மாலை வேளையில் வீட்டில் உள்ளோருக்கு ஒரு சத்தான, அதே சமயம் சுவையான ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? எப்போதும் பஜ்ஜி, போண்டா, வடை தான் செய்து கொடுப்பீர்களா? உங்கள் வீட்டில் ராகி மாவு உள்ளதா?
அப்படியானால் அந்த ராகி மாவுடன் வெல்லத்தை சேர்த்து ஒரு ஸ்வீட் பூரி செய்யுங்கள். இந்த ஸ்வீட் ராகி பூரி மாலை வேளையில் சாப்பிட ஏற்ற ஒரு சத்தான மற்றும் சுவையான ஸ்நாக்ஸாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு ஸ்வீட் ராகி பூரியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஸ்வீட் ராகி பூரி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* எள்ளு விதைகள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* ராகி மாவு - 2 கப்
* உப்பு - 2 சிட்டிகை
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் வெல்லத்தைப் போட்டு, அதில் 1/2
கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தைக் கரைத்துக் கொள்ள
வேண்டும். இதற்கு பாகு பதம் எதுவும் தேவையில்லை. வெறும் வெல்லத்தை
மட்டும் கரைத்தால் போதும். வெல்லம் கரைந்ததும், அடுப்பை
அணைத்துவிட்டு, அதை வடிகட்டியால் வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன்
எள்ளு விதைகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஒரு பாத்திரத்தில்
போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் ராகி மாவை சேர்த்து, 2 சிட்டிகை உப்பு சேர்த்து கையால்
கிளறி விட வேண்டும்.
* பிறகு வெல்ல நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, பிசைய வேண்டும். மிகவும்
சூடாக இருந்தால் கரண்டியால் கிளறி விடுங்கள். கை பொறுக்கும் சூட்டில்
இருந்தால், கையால் பிசைந்து விடுங்கள். மாவானது மிகவும் கெட்டியாக
இல்லாமல், மென்மையாக இருக்க வேண்டும். மென்மையாக இருந்தால் தான் பூரி
நன்கு உப்பி வரும்.
* பின் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாழை இலையை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, உருட்டி
வைத்துள்ள உருண்டையை ஒவ்வொன்றாக எடுத்து, தட்டையாக தட்டிக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள மாவை போட்டு பொரித்து
எடுத்தால், சுவையான ஸ்வீட் ராகி பூரி தயார்.
Image Courtesy: Flavors of Mumbai



Click it and Unblock the Notifications
