Just In
- 7 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 8 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 9 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 11 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சர்க்கரைவள்ளிக்கிழங்கு பாயசம் சாப்பிட்டதே இல்லையா?... இப்படி செஞ்சா ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்...
இந்த சாபுதனா சர்க்கரை வள்ளிக் கிழங்கு கீர் ரெசிபி உங்கள் விரத நாளன்று இனிமையான விருந்தளிக்கப் போகிறது. அப்படியே சர்க்கரை வள்ளிக் கிழங்கின் சுவையும், வாயில் போட்ட உடனேயே கரையும் மென்மையான ஜவ்வரிசியும், குங்குமப் பூவின் நிறமான வாசனையும் நறுமணமிக்க ஏலக்காய், உலர்ந்த பழங்களின் அலங்கரிப்பும் உங்கள் விரத நாளை இனிமையாக்க போகிறது.
உங்கள் விரத நாளை சிறந்த உணவுடன் கொண்டாட இந்த சிறிய ஸ்வீட் கீர்
சரியான காம்பினேஷனாக அமையப் போகிறது. இதன் நறுமணமும் சுவையும்
கண்டிப்பாக உங்கள் நாவின் சுவை மொட்டுகளை மெய் மறக்க வைத்து விடும்.
விரத பண்டிகையின் போது உங்கள் பிஸியான நேரத்திலும் கூட இந்த ரெசிபியை
எளிதாக செய்து அசத்திடலாம்.
சரி வாங்க தித்திக்கும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு கொண்டு செய்யும்
இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை
விளக்க படத்துடனும் காணலாம்.
Recipe By: மீனா பந்தரி
Recipe Type: டிசர்ட்
Serves: 2
-
ஜவ்வரிசி - 3 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 1
முந்திரி பருப்பு (தோல் நீக்கியது) - 1டேபிள் ஸ்பூன்
பாதாம் பருப்பு (தோல் நீக்கியது) - 1 டேபிள் ஸ்பூன்
பால் - 3 கப்
ஏலக்காய் - 1 டேபிள் ஸ்பூன்
-
ஒரு பெளலை எடுத்து அதில் ஜவ்வரிசியை எடுத்து கொள்ளவும்
அதில் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
ஒரு குக்கரை எடுத்து அதில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை பாதியாக வெட்டி வைக்கவும்
அதில் தண்ணீர் சேர்த்து 3-4 விசில் அடிக்கும் வரை வேக வைக்கவும்
வேக வைத்த கிழங்கின் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பால் சேர்க்கவும்
3-5 நிமிடங்கள் பாலை நன்றாகக் கொதிக்க விட்டு அதில் ஜவ்வரிசி சேர்க்கவும்
நன்றாக கலக்கி குறைந்த தீயில் 4-5 நிமிடங்கள் பாலை வைத்திருக்க வேண்டும்
அதனுடன் சர்க்கரை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடங்கள் சமைக்கவும்
வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறவும்
பிறகு குங்குமப் பூ, ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறவும்
அடுப்பை அணைத்து விட்டு ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்
அப்படியே பாதாம் பருப்பை அதன் மேல் தூவி அலங்கரித்து சூடாக அல்லது ஆறின பிறகு பரிமாறுங்கள்.
சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் ரெசிபி ரெடி
- ஜவ்வரிசியை முன்பே ஊற வைத்து கொண்டால் பாயசத்துக்கு மென்மையான பதம் கிடைக்கும்.
- வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை துருவிக் கொண்டால் பாயசம் ரொம்பவும் கட்டிகள் இல்லாமல் இருக்கும்.
- பரிமாறும் அளவு - 1 கப்
- கலோரிகள் - 147 கலோரிகள்
- கொழுப்பு - 5.4 கிராம்
- புரோட்டீன் - 3.9 கிராம்
- கார்போஹைட்ரேட் - 21 கிராம்
- நார்ச்சத்து - 1.4 கிராம்
படத்துடன் செய்முறை விளக்கம் : சாபுதனா சர்க்கரை வள்ளிக் கிழங்கு கீர் ரெசிபி செய்வது எப்படி