Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
சர்க்கரைவள்ளிக் கிழங்கை வைச்சு இந்த செட்டிநாடு அடை தோசை செஞ்சு பாருங்க... டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்...!
Sweet Potato Adai Dosai Recipe in Tamil: தமிழ்நாடு சுவையான உணவுகளுக்கு பெயர் பெற்றது. மதுரை, காரைக்குடி போன்ற இடங்கள் உணவுக்கு பிரசித்தி பெற்றவையாக இருந்தாலும், ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் பிரசித்தி பெற்ற சில உணவுகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் காரைக்குடியின் பல புகழ்பெற்ற உணவுகளில் சர்க்கரை வள்ளிக் கிழங்கு அடை அல்லது இனிப்பு அடை மிகவும் பிரபலமானதாகும்.
தினமும் இட்லி, தோசை போன்ற உணவுகளையே சாப்பிட்டு சலித்துப் போனவர்களுக்கு இந்த இனிப்பு அடை வித்தியாசமானதாக சுவையில் மிகவும் அருமையாக இருக்கும். இந்த அடையை காலை அல்லது இரவு உணவாகவும் சாப்பிடலாம் அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். இதில் கூடுதல் சிறப்பு இதற்கு சைடிஷ் எதுவுமே தேவையில்லை அப்படியே சாப்பிடலாம்.

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடை தோசை ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடை தோசையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- சர்க்கரைவள்ளிக் கிழங்கு - ¼ கிலோ
- புழுங்கல் அரிசி - 1 கப்
- ரவை - ½ கப்
- மைதா மாவு - ½ கப்
- வெல்லம் - ¼ கிலோ
- ஏலக்காய் - 3 (பொடியாக்கியது)
- நெய் - 4 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் - 1 மூடி
செய்முறை :
- அரிசியை இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீரில் அலசி பின் 5 மணி
நேரம் ஊற வைத்து கொள்ளவும். அரிசி நன்றாக ஊறியதும் அதை மிக்ஸியில்
போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- சர்க்கரைவள்ளிக் கிழங்கை மண் இல்லாமல் கழுவி தோல் சீவி, சிறு
துண்டுகளாக நறுக்கி அரிசியுடன் சேர்த்து சற்று கெட்டியாக அரைத்துக்
கொள்ளவும்.
- அதில் ரவை மற்றும் மைதா மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- தேங்காயை துருவி வைத்து கொள்ளவும். ஏலக்காயை பொடியாக அரைத்து
எடுத்து கொள்ளவும். வெல்லத்தை சிறிய துண்டுகளாக உடைத்து வைத்து
கொள்ளவும்.
- துண்டுகளாக உடைத்த வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன்
சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து சூடேற்றி கரைய
விடவும்.
- வெல்லம் கரைந்ததும் அதை வடித்து மண் மற்றும் தூசி இல்லாமல் எடுத்து
அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்சி கொள்ளவும்.
- பின் அதில் பொடி செய்த ஏலக்காய் மற்றும் துருவிய தேங்காயை
சேர்க்கவும்.
- அரைத்து வைத்த மாவுடன் வெல்லக் கரைசலை சேர்த்து அடை மாவு பதத்திற்கு
நன்கு கலந்து கொள்ளவும்.
- தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அரைத்து வைத்த மாவை எடுத்து
தோசை கல்லில் சிறிய அடையாக தட்டி, சுற்றிலும் நெய் விட்டு மிதமான
தீயில் இரண்டு புறமும் நன்கு வேக வைத்து எடுத்தால், சுவையான
சர்க்கரைவள்ளிக் கிழங்கு அடை ரெடி.



Click it and Unblock the Notifications