Latest Updates
-
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
1 கப் மைதா இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல சுருள் போளி செஞ்சு சாப்பிடுங்க.. செமயா இருக்கும்..
Surul Poli Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் ஏதாவது சாப்பிட செய்து கொடுக்குமாறு கேட்கிறார்களா? அதுவும் ஸ்வீட் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் போளியை விரும்பி சாப்பிடுவார்களா?
உங்கள் வீட்டில் மைதா மாவு உள்ளதா? அப்படியானால் சுருள் போளியை செய்யுங்கள். இந்த சுருள் போளி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, அட்டகாசமான சுவையைக் கொண்டிருக்கும்.

உங்களுக்கு சுருள் போளியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுருள் போளி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - 1 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 1 கப்
* முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பாதாம் - 4-5 (பொடியாக நறுக்கியது)
* குங்குமப்பூ - 4-5
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
* பொட்டுக்கடலை - 1 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* சர்க்கரை - 3/4-1 கப்
* முந்திரி - 2 டீஸ்பூன
* ஏலக்காய் - 4-5
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் மைதா, உப்பு, நெய் மற்றும் சிறிது நீரை
சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை, ஏலக்காய், சர்க்கரை சேர்த்து
நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய், முந்திரி ஆகியவற்றை சேர்த்து கலந்து
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 1 கப் சர்க்கரை மற்றும் 1 கப் நீரை ஊற்றி
அடுப்பில் வைத்து, குங்குமப்பூவை சேர்த்து கிளறி, சற்று கெட்டியாகும்
வரை கொதிக்க வைத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்
கொள்ள வேண்டும்.
* பின் ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து பூரி அளவிற்கு தேய்த்து ஒரு
தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ள பூரியை ஒவ்வொன்றாக
போட்டு மொறுமொறுவென்று பொரிக்காமல், அதற்கு முன்னரே எடுத்துவிட
வேண்டும்.
* பின் அந்த பூரியை எடுத்து, முதலில் சர்க்கரை பாகுவில் நனைத்து, ஒரு
தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதன் மேல் தயாரித்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவை ஒரு ஸ்பூன்
எடுத்து தூவி, சுருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப்
போல் அனைத்து பூரிகளையும் செய்ய வேண்டும். இப்போது சுவையான சுருள்
போளி தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications