Latest Updates
-
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வக்ர நிவர்த்தி அடையும் சனி பகவான்: டிசம்பர் முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க... -
UPI Transaction New Rules: புதிய UPI விதிமுறைகளின் படி எதற்கெல்லாம் கட்டணம் வசூலிக்கப் போறாங்க தெரியுமா? -
2 தக்காளியும், 1 கையளவு புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
செப்டம்பர் 16, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப் போகுதாம் -
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும்
சம்மர் ஸ்பெஷல்: மாம்பழ குல்பி செய்வது எப்படி?
கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் ஆங்காங்கு மாம்பழங்கள் விற்கப்படுவதைக் காணலாம். கோடைக்காலம் மாம்பழ சீசன் என்பதால், சுவைமிக்க மாம்பழங்கள் விலைக்குறைவில் இருக்கும். இந்த மாம்பழங்களைக் கொண்டு பல சுவையான ரெசிபிக்களை செய்யலாம். குறிப்பாக கோடைக்காலத்தில் வெயில் அதிகமாக இருப்பதால், பலரும் குளிர்ச்சியாக சாப்பிட விரும்புவோம்.
நீங்களும் குளிர்ச்சியாக சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், மாம்பழங்களைக் கொண்டு குல்பியை செய்து சாப்பிடுங்கள். இந்த மாம்பழ குல்பி செய்வது மிகவும் சுலபம். கோடைக்காலத்தில் கடைகளில் விற்கப்படும் ஐஸ்க்ரீம்களை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே குல்பியை செய்து கொடுங்கள். உங்களுக்கு மாம்பழ குல்பி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே மாம்பழ குல்பி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பால் - 500 மிலி
* சர்க்கரை - 3/4 கப்
* சோள மாவு - 2 டீஸ்பூன்
* குங்குமப்பூ - 1 சிட்டிகை
* மாம்பழ கூழ் - 1 1/2 கப்
* மாம்பழ எசன்ஸ் அல்லது ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் நன்கு கனிந்த மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, அதை துண்டுகளாக்கி, மிக்சர் ஜாரிப் போட்டு நன்கு மென்மையாக கூழ் போன்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் சோள மாவு, சிறிது தண்ணீர் அல்லது பால் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, கொதிக்க வைக்க வேண்டும். பால் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து குறைவான தீயில் வைத்து 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அந்த பாலில் கரைத்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து கிளறி நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பிறகு அந்த பாலில் குங்குமப்பூவை சேர்த்து கிளறி, பாலை குளிர வைக்க வேண்டும்.
* பால் குளிர்ந்ததும், அதில் மாம்பழ கூழ், மாம்பழ எசன்ஸ் அல்லது ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக குல்பி மோல்டுகள் அல்லது சிறு சிறு டம்ளரில் இந்த கலவையை ஊற்றி, ஃப்ரீசரில் வைத்து, நன்கு உறைய வைக்க வேண்டும்.
* குல்பி நன்கு உறைந்ததும், அதில் ஐஸ் குச்சிகளை சொருகினால், சுவையான மாம்பழ குல்பி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
