Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
அடுத்தமுறை சிக்கன் கிரேவி செய்யும் போது இந்த ஒரு பொருளையும் சேத்துக்கோங்க.. சுவை சும்மா அள்ளும்...
Spicy Chicken Gravy Recipe In Tamil: இன்று விடுமுறை என்பதால் பலரது வீடுகளில் பூரியை செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக சிக்கனை செய்து சாப்பிடும் பழக்கம் இருக்கும். நீங்கள் சிக்கன் கிரேவியை எப்போதும் ஒரே மாதிரி தான் செய்வீர்களா?
அப்படியானால் இன்று சிக்கன் கிரேவியின் சுவையை அதிகரிக்க, அத்துடன் ஒரு பொருளை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த ஒரு பொருள் சிக்கனை நன்கு மென்மையாக வேக வைப்பதோடு, கிரேவியின் சுவையையும் அதிகரிக்கும். அதுவும் இந்த மாதிரி சிக்கன் கிரேவியை செய்தால், கணக்கில்லாமல் பூரியை சாப்பிடுவார்கள். மேலும் இந்த கிரேவி பூரி, சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

உங்களுக்கு அந்த சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே அந்த சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 3
* பெரிய வெங்காயம் - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய தக்காளி - 1
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சிக்கன் - 1/2 கிலோ
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
முக்கியமாக சிக்கனைக் கழுவும் போது சிறிது மஞ்சள் தூள் சேர்த்து
பிரட்டி, ஒருமுறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் வெங்காயம், தக்காளியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள
வேண்டும். பச்சை மிளகாயையும் சிறு துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு, சிறிது
நீரை ஊற்றி பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து ஒரு முறை கிளறி, மஞ்சள் தூள்,
சுவைக்கேற்ப உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் பச்சை மிளகாய்
சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் தயிரை சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும். அடுத்து
மிளகுத் தூளை சேர்த்து ஒருமுறை கிளறி, கழுவி வைத்துள்ள சிககனை
சேர்த்து நன்கு கிளறி விட்டு 5 நிமிடம் மூடி வைத்து மிதமான தீயில்
வைத்து வேக வைக்க வேண்டும்.
* பிறகு மூடியைத் திறந்து, சிக்கனை ஒருமுறை கிளறி, ஒரு டம்ளர் நீரை
ஊற்றி, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பையும் சேர்த்து கிளறி,
மூடி வைத்து குறைவான தீயில் 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, மூடியைத்
திறந்து, மேலே கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான மற்றும்
காரசாரமான சிக்கன் கிரேவி தயார்.
Image Courtesy: Yummy Tummy Aarthi



Click it and Unblock the Notifications
