Latest Updates
-
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
1 கப் மீல் மேக்கர் இருந்தா இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - சாதம், சப்பாத்தி எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்
Soya Sukka Recipe in Tamil: சைவ உணவுகளில் அதிக புரோட்டின் நிறைந்த பொருட்களில் ஒன்று மீல் மேக்கர். உங்கள் வீட்டில் உள்ளோருக்கு மீல் மேக்கர் என்றால் ரொம்ப பிடிக்குமா? புலாவ், சப்பாத்தி அல்லது தோசை என எது சமைத்தாலும், அதற்கு மீல் மேக்கரை வைத்து அடிக்கடி சைடு டிஷ்ஷாக செய்வீர்களா? அப்படியானால் ஒரே சுவையில் மீல் மேக்கர் கிரேவியை செய்யாமல், ஒருமுறை இந்த சோயா சுக்காவை செய்து பாருங்கள்.

இந்த சோயா சுக்கா கிட்டதட்ட மட்டன் சுக்கா சுவையில் பிரமாதமாக இருக்கும். இதை தோசை, சப்பாத்திக்கு சைடிஷாக வைத்தும் சாப்பிடலாம், இல்லையெனில் சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் தக்காளி சாதம் போன்றவற்றுக்கு சைடிஷாகவும் வைத்து சாப்பிடலாம். இந்த மாதிரி சைடிஷ் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு மீல் மேக்கர் சுக்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா அரைக்க:
- 1 பெரிய வெங்காயம் (நறுக்கியது)
- 1 பெரிய தக்காளி (நறுக்கியது)
- 1 ஸ்பூன் எண்ணெய்
- ½ ஸ்பூன் சோம்பு
- 5 பூண்டுப் பல்
சுக்கா செய்ய:
- 1 கப் சோயா
- 1 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் மல்லித் தூள்
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- ½ ஸ்பூன் கரம் மசாலா தூள்
- ¼ ஸ்பூன் மிளகுத் தூள்
- சிறிது கறிவேப்பிலை
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- மீல் மேக்கரைச் சமைக்க, அவை மூழ்கும் அளவிற்குத் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்; ஆறியதும், அதிலுள்ள அதிகப்படியான நீரைப் பிழிந்துவிடவும்.
- ஒவ்வொரு சோயா துண்டையும் 2-3 துண்டுகளாக வெட்டி தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். சோம்பைச் சேர்த்து அது பொரியும் வரை காத்திருக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டுப் பற்களைச் சேர்க்கவும்.
- வெங்காயம் மற்றும் தக்காளி மென்மையாகும் வரை மிதமான தீயில் வதக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, முற்றிலும் ஆறவிடவும்.
- பின்னர் இதனை சற்று கொரகொரப்பான விழுதாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
- அதே கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கறிவேப்பிலையைச் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
- இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அது கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- பின்னர் காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகிய மசாலாப் பொடிகளைச் சேர்க்கவும். மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- அதன்பின் கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள வெங்காயம்-தக்காளி விழுதைச் சேர்த்துக் கிளறவும்.
- உப்பு சேர்த்து, மிதமான தீயில் சில நிமிடங்கள் சமைக்கவும்.
- இப்போது நறுக்கிய சோயா துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- இறுதியாக மிளகுத்தூள் தூவி, 2 நிமிடங்கள் கிளறவும்.
- அடுப்பிலிருந்து இறக்கி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான சோயா சுக்கா ரெடி!



Click it and Unblock the Notifications