Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
Soya Chunks Masala Recipe: மீல்மேக்கர் மசாலா
உங்கள் வீட்டில் மீல்மேக்கர் உள்ளதா? வீட்டில் உள்ளோர் இதை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் மீல்மேக்கல் மசாலா செய்யுங்கள். இந்த மசாலா சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும்.
உங்கள் வீட்டில் இன்று சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் மீல்மேக்கர் உள்ளதா? வீட்டில் உள்ளோர் இதை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் மீல்மேக்கல் மசாலா செய்யுங்கள். இந்த மசாலா சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு மீல்மேக்கர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல்மேக்கர் மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல்மேக்கர் - 1 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* வேக வைத்த பட்டாணி - 1 கப்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* பட்டை - 1/4 இன்ச்
* கிராம்பு - 2
வறுத்து அரைப்பதற்கு...
* தக்காளி - 1
* தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மீல்மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் வேக வைத்து இறக்கி வடிகட்டி, பின் குளிர்ந்த நீரில் 2-3 முறை அலசி, அதிகப்படியான நீரை பிரிந்துவிட்டு வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது ஊற்றி சூடானதும், சோம்பு, தக்காளி மற்றும் தேங்காய் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கி இறக்கி குளிர வைத்து, நீர் அதிகம் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, கரம் மசாலா, மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளற வேண்டும்.
* இப்போது அதில் அரைத்த கலவையை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* இறுதியாக அதில் மீல்மேக்கரை சேர்த்து 3-4 நிமிடம் நன்கு கிளறி, வேக வைத்த பட்டாணியை சேர்த்து பிரட்டி இறக்கினால், மீல்மேக்கர் மசாலா தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
