Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
மீல் மேக்கர் குருமா
சப்பாத்திக்கு குருமா அட்டகாசமான காம்பினேஷன். அதிலும் மீல் மேக்கர் குருமா மிகவும் சூப்பராக இருக்கும். மேலும் இந்த குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்திற்கும் அற்புதமாக இருக்கும்.
சப்பாத்திக்கு குருமா அட்டகாசமான காம்பினேஷன். அதிலும் மீல் மேக்கர் குருமா மிகவும் சூப்பராக இருக்கும். மேலும் இந்த குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்திற்கும் அற்புதமாக இருக்கும். சைவ உணவாளர்களுக்கு இந்த மீல் மேக்கர் குருமா அசைவ குருமாவின் நிகரான சுவையைக் கொடுக்கும். குறிப்பாக இந்த குருமா குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு மீல் மேக்கர் குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 1 கப்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீபூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீபூன்
* மல்லித் தூள் - 2 டீபூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீபூன்
* கரம் மசாலா - 1/4 டீபூன்
* சோம்பு - 1/2 டீபூன்
* கிராம்பு - 4
* பட்டை - 1 இன்ச்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* பட்டை - 1 இன்ச்
* சீரகம் - 1/2 டீபூன்
* சோம்பு - 1/2 டீபூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் பூன்
செய்முறை:
* முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து இறக்கி, குளிர்ந்த நீரில் இரண்டு முறை நன்கு அலசி, அதிகப்படியான நீரை கையால் பிழிந்து, மீல் மேக்கரை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீபூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறிவிட்டு, துருவிய தேங்காயை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி இறக்கி, குளிர வைக்கவும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும், பட்டை, சீரகம், சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி, வேக வைத்துள்ள மீல் மேக்கரை சேர்த்து கிளறி, 1 1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 7-8 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான மீல் மேக்கர் குருமா தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications
