Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
1 கப் மீல் மேக்கர் இருந்தா ஒரு டைம் இப்படி கிரேவியை ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்...
Soya Chunks Gravy Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? ஏதாவது காரசாரமாக சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் மீல் மேக்கர் உள்ளதா? அப்படியானால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு கிரேவியை செய்யுங்கள்.
இந்த கிரேவிக்கு மசாலாவை அரைத்து சேர்ப்பதால், இதன் சுவை பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி சிக்கன், மட்டன் கிரேவியே தோற்றுப் போகும் அளவில் ருசியாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு மீல் மேக்கர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல் மேக்கர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீல் மேக்கர் - 1 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* அன்னாசிப்பூ - 1
* பட்டை - 2 துண்டு
* பிரியாணி - 2
* பெரிய வெங்காயம் -2 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 1/2 டம்ளர்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1 சில்லு
* இஞ்சி - 1 துண்டு
* பூண்டு - 7-8 பல்
* கிராம்பு - 3
* கல்பாசி - சிறிது
* சோம்பு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து
இறக்கி, அந்நீரில் 1 கப் மீல் மேக்கரை சேர்த்து மூடி வைத்து 10
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் தேங்காய், இஞ்சி, பூண்டு, கிராம்பு,
கல்பாசி, சோம்பு மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும். நீரை அதிகம் ஊற்றிவிட வேண்டாம்.
* 10 நிமிடம் ஆன பின், மீல் மேக்கரில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு,
அதில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து வெளியேற்றிவிட்டு தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும். மீல் மேக்கர் பெரியதாக இருப்பதை உணர்ந்தால்,
அவற்றை நறுக்கிக் கொள்ளுங்கள்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், அன்னாசிப்பூ, பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் சோம்பை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நிறம் மாறும்
வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி
நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து
2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 2
நிமிடம் நன்கு கிளறி, பின் 1 1/2 கப் நீரை ஊற்றி நன்கு கிளறி விட்டு,
கிரேவியை கொதிக்க வைக்க வேண்டும். கிரேவியில் இருந்து நீர் கொதிக்க
ஆரம்பித்ததும், மீல் மேக்கரை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து 5
நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான மீல் மேக்கர் கிரேவி தயார்.
Image Courtesy: Chitra's Food Book



Click it and Unblock the Notifications